கொரியாவை சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான FuriosaAI என்ற நிறுவனத்தை வாங்க மெட்டா பேச்சுவார்த்தையை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து இழுபறியாக இருந்து வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது நெகட்டிவ்வாக முடிவுக்கு வந்துள்ளது.
FuriosaAI நிறுவனத்தை Meta வாங்க முயற்சித்ததன் காரணம் ஆசிய ஸ்டார்ட்அப்களில் சிறந்த நிறுவனமாக இது திகழ்வதால் தான். இதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜூன் பைக் (June Paik), முன்னதாக Samsung Electronics மற்றும் AMD (Advanced Micro Devices) நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவமுடையவர்.
FuriosaAI நிறுவனம், AI Inference பயன்பாடுகளுக்கான சிறப்பான சிப்கள் உருவாக்குகிறது. 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், Nvidia உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை நேரடியாக சந்திக்கக்கூடிய RNGD (Renegade) என்ற இரண்டாவது தலைமுறை சிப்செட்டை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக முதலீடு திரட்ட திட்டமிட்டுள்ளது. விரைவில், பங்குச் சந்தை (IPO) வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. எனவே இந்நிறுவனத்திடம் மெட்டா நடத்திய பேரம் கைகூடவில்லை என கூறப்படுகிறது.