வாட்ஸ் அப்பில் லைவ் லொகேஷன் பகிரும் அம்சம் ஏற்கனவே இருக்கும் நிலையில், தற்போது மெட்டாவின் இன்ஸ்டாகிராமிலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமில் பில்லியன் கணக்கான பயனர்கள் இருக்கும் நிலையில், இந்த பயனர்களின் வசதிக்காக புதுப் புதுப் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் லைவ் லொகேஷன் பகிரும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்ஸ்டா பயனர்கள் நேரடி மெசேஜ்கள் வழியாக தங்களது இருப்பிடத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த அம்சத்தில், அதிகபட்சமாக 60 நிமிடங்கள் வரை லைவ் லொகேஷன் பகிர முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், வாட்ஸ் அப்பில் இந்த அம்சம் எட்டு மணி நேரம் வரை லைவ் ஆக்டிவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், லைவ் லொகேஷன் ஒருவருக்கு ஒருவராகவும், குரூப்புகளிலும் பகிர முடியும். அதே நேரத்தில், இதனை மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதற்கான இன்டிகேட்டர் சம்பந்தப்பட்ட ஷேர் பாக்ஸில் இருக்கும் என்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த லைவ் லொகேஷன் பகிரும் அம்சம் சில நாடுகளில் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. கூடிய விரைவில் இந்த அம்சம் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என இன்ஸ்டாகிராம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.