நாளுக்கு நாள் சோசியல் மீடியாக்களில் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்கள் அனைவருக்கும் பரிச்சயம் பட்டதாக காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக தற்போது அனைவரும் உபயோகிக்கும் ஒரு மொபைல் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்அப். இந்த வாட்ஸ் அப்பில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்பட்டு வரும். இந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் புது அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி வாட்ஸ் அப்பில் விரைவில் 2ஜிபி வீடியோ வரை அனுப்பும் வசதி ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகிரப்படும் வீடியோவின் அளவை 100MB இலிருந்து 2ஜிபி ஆக அதிகரிக்க வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2டிஜிபி வீடியோ வரை அனுப்பும் திட்டத்தை முதற்கட்டமாக அர்ஜெண்டினாவில் பரிசோதிக்கவும் வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் பயனாளர்கள் மிகவும் பயன்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.