வாட்ஸ் அப்பில் தவறான மெசேஜ் சென்றுவிட்டதா? கவலை வேண்டாம் இனி எடிட் செய்து கொள்ளலாம்..!

By Bala Siva

Published:

வாட்ஸ் அப் என்பது இன்றியமையாத ஒரு சமூக வலைதளமாக மாறிவிட்ட நிலையில் உலகின் மில்லியன் கணக்கான பயனாளிகள்  வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் என்பது மெசேஜ்களை பரிமாறிக் கொள்வது மட்டுமின்றி டாக்குமென்ட்களை பரிமாறிக் கொள்வது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பரிமாறிக் கொள்வது என பல்வேறு வசதிகள் உள்ளன. மேலும் வாட்சப் மூலம் பண பரிமாற்றம் கூட செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இடம் பெற்று விட்ட வாட்ஸ்அப் இல்லாமல் இனி இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாட்ஸ்அப் பயனாளர்கள் வசதிக்கேற்ப அவ்வப்போது புது புது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது என்பதும் அவை பயனாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

whatsapp spam1

அந்த வகையில் தவறாக ஒரு மெசேஜ் அனுப்பி விட்டால் அந்த மெசேஜை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளலாம் என்ற புதிய வசதி தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு மெசேஜை தவறாக அனுப்பி விட்டால் அந்த மெசேஜ் குறித்து வருத்தப்படுவது ஒன்று. ஆனால் அனுப்பிய மெசேஜை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் பலர் சிக்கலில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது மெசேஜ் எடிட் செய்து கொள்ளலாம் என்ற அம்சம் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது அது குறிப்பிடத்தக்கது

அனுப்பிய செய்திகளை அனுப்பிய 15 நிமிடங்கள் வரை பயனர்கள் திருத்துவதற்கு வாட்ஸ் அப் இப்போது அனுமதிக்கிறது. இது மே 10ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. அனுப்பிய செய்தியை திருத்த, செய்தியை நீண்ட நேரம் அழுத்தி “திருத்து” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் செய்தியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்து மீண்டும் அனுப்பலாம். செய்தியைப் பெறுபவர் செய்தி திருத்தப்பட்டிருப்பதைக் காண்பார்கள், ஆனால் அதே நேரத்தில்  அவர்கள் அனுப்பப்பட்ட அசல் செய்தியையும் பார்ப்பார்கள்.

இந்த புதிய அம்சம் வாட்ஸ் அப் பயனர்களுக்கு வரவேற்கத்தக்க கூடுதல் அம்சமாகும், ஏனெனில் இது பயனர்கள் தவறுகளை சரி செய்ய அல்லது செய்திகளை நீக்கிவிட்டு மீண்டும் அனுப்பாமல் சில மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கிறது. நீங்கள் தற்செயலாக எழுத்துப் பிழையுடன் செய்தியை அனுப்பினால் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.