Meta நிறுவனத்தின் CEO மார்க் ஸக்கர்பெர்க், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ சேனலில் இதை அறிவித்தார். இந்த வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள இசையை தேர்வு செய்து தாங்கள் பதிவு செய்யும் புகைப்படத்திற்கு பின்னணி இசையாக வைக்கலாம். இந்த புதிய அம்சம் உலகில் உள்ள அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும்.
WhatsApp-ன் இந்த புதிய அம்சம் ஏற்கனவே Instagram Storiesயில் செயல்படுகிறது, Instagram பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு பாடலைத் தேர்வு செய்து அதை புகைப்படத்தின் மீது இணைப்பதை பார்த்திருக்கிறோம். இந்த வசதி தற்போது WhatsApp-ல் வந்துள்ளதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
WhatsApp ஸ்டேட்டஸில் இசையை எப்படி சேர்ப்பது? என்பதை தற்போது பார்ப்போம். முதலில் WhatsApp செயலியை திறந்து ‘Updates’ செல்லவும். அதற்கு இடது மேல் மூலையில் உள்ள ‘Add Status’ என்ற ஐகானை அழுத்தவும். அதன்பின் உங்கள் கேலரியிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தேர்வு செய்யவும். அதன்பின் மேலே உள்ள புதிய இசை ஐகானை அழுத்துவதன் மூலம் மியூசிக் லைப்ரரியை ஓப்பன் செய்து உங்களுக்கு பிடித்த ஒரு பாடலை தேர்வு செய்யலாம், அல்லது அந்த பாடலில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஒரு சிறு பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். தேவையானால் இசை ஸ்டிக்கரை பொருத்தமான இடத்தில் நகர்த்தலாம். தேர்வு செய்த பாடலுடன் ஸ்டேட்டஸை பகிரவும். அதன்பின் உங்கள் ஸ்டேட்டஸ் உடன் இசையும் இணைந்து கொள்ளும்.
உங்கள் ஸ்டேட்டஸை பார்ப்பவர்கள் ஓப்பன் செய்தவுடன் இசை தானாகவே பாட தொடங்கும். இந்த அம்சம் Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை நூலகத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் அதிகாரப்பூர்வ உரிமம் பெற்றவை என்பதால் காப்பிரைட் பிரச்சனை வராது. ஆனால் பயனர்கள் தங்களது சொந்த பாடல்களை இப்போது பதிவேற்றம் செய்ய முடியாது. மேலும் புகைப்பட ஸ்டேட்டஸில் 15 வினாடிகள், வீடியோ ஸ்டேட்டஸில் 60 வினாடிகள் வரை இசை சேர்க்கலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
