சாட்-ஜிபிடியிடம் கேட்கக் கூடாத கேள்விகள் என்னென்ன தெரியுமா?

By Bala Siva

Published:

 

ஏஐ டெக்னாலஜியின் சாட்-ஜிபிடியிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்டு அதற்கான பதிலை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில கேள்விகளை கேட்கக்கூடாது என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்த ஒரு தகவலையும் சாட்-ஜிபிடியிடம் கேட்டு பலன் அடையலாம் என்ற நிலையில், சட்டவிரோத செயல்களுக்கான வழிகள், நிதி ஆலோசனைகள், மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றைக் கேட்கக் கூடாது என்ற தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக ஒரு செயலை செய்வது எப்படி என்பது குறித்த ஆலோசனையை கண்டிப்பாக சாட்-ஜிபிடியிடம் கேட்கக் கூடாது என்றும் அதேபோல் மருத்துவ ஆலோசனைகளை சாட்-ஜிபிடியிடம் கேட்டு அதன்படி நடப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாட்-ஜிபிடியிடம் ஒருவரது தனிப்பட்ட தகவல்களை கேட்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நம்மைப் பற்றியே சாட்-ஜிபிடியிடம் கேட்க கூடாது என்றும், குறிப்பாக, சாட்-ஜிபிடியிடம் இதுவரை நான் கேட்ட கேள்விகளில் இருந்து என்னைப் பற்றி சில வார்த்தைகள் கூறு என்ற கேள்வியை கேட்டால், அதற்கு சாட்-ஜிபிடி  சொல்லும் பதிலை உண்மையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஏற்கனவே தொகுக்கப்பட்ட டேட்டாக்களில் இருந்து வரும் பதில் என்பதால், இது மாதிரியான பதில்களை பரிசீலனை செய்துதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

மேலும்,   இதுபோன்ற கேள்வியை கேட்பதற்கு சாட்-ஜிபிடி பிளஸ் சேவையில் மட்டுமே சாத்தியம் என்றும், ஏனென்றால் இதில் மட்டுமே நம்முடைய பழைய உரையாடல் சேமித்து வைக்கப்படுகிறது என்றும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் சேவையில், இது மாதிரியான கேள்விக்கு பதில் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உங்களைப் பற்றி கேள்விகள் கேட்டு நீங்கள் முட்டாள் ஆக வேண்டாம் என்றும் ஏஐ தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் தெரிவித்து உள்ளதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சாட்-ஜிபிடி அளிக்கும் தகவல்கள் முழுமையான உண்மையாகி விடாது என்றும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது பிரச்சினையை உண்டாக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. சாட்-ஜிபிடி சொல்லும் தகவலை ஆய்வு செய்து அதன் பிறகு தான் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.