தேர்தலில் வெற்றி பெற்றால் போதாது.. மன்னர் அனுமதி அளித்தால் தான் பிரதமர்.. பிரிட்டனின் நடைமுறை..!

By Bala Siva

Published:

 

இந்தியா போன்ற குடியரசு நாடுகளில் தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அந்த தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை பிரதமர் பதவி ஏற்க வருமாறு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார். ஆனால் பிரிட்டனில் இன்னும் மன்னர் ஆட்சி இருக்கும் நிலையில் மன்னர் அனுமதி அளித்தால் மட்டுமே பிரதமராக பதவி ஏற்க முடியும் என்ற நிலையில் உள்ளது.

பிரிட்டனை பொருத்தவரை மன்னர் ஆட்சியில் இருந்து ஆளும் அதிகாரம் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவருக்கு மாற்றப்பட்டாலும், அந்த அதிகாரத்தை பிரதமருக்கு கொடுக்கும் உரிமை இன்னும் மன்னரிடம் மட்டுமே உள்ளது என்றும் அதற்கான நிகழ்வு நடந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பிரதமர் ஆக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரிட்டன் தேர்தலில் 14 ஆண்டுகள் கழித்து தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் கியெர் ஸ்டார்மர் என்பவர் பிரதமர் ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் அரண்மனைக்கு சென்று மன்னரை சந்தித்ததாகவும் இந்த சந்திப்புக்கு பின்னர் முறைப்படி அவர் பிரதமராக பதவி ஏற்க மன்னர் அனுமதி அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்பு மன்னர் தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் அவர்களை சந்தித்து கைகுலுக்கி விடை கொடுப்பார் என்றும் அதன் பிறகு தான் புதிய பிரதமரை பதவி ஏற்க அவர் ஒப்புதல் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

புதிய பிரதமருக்கு கை கொடுத்து மன்னர் அனுமதி அளித்தால் மட்டுமே பிரதமராக பொறுப்பேற்க முடியும் என்ற விதிமுறை பிரிட்டனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 70 ஆண்டுகளாக ராணியாக இருந்த எலிசபெத் அவர்கள் தன்னுடைய காலத்தில் 15 பிரதமர்களுக்கு கை கொடுத்து பதவி ஏற்க அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மன்னர் சார்லஸ் இதுவரை இரண்டு பிரதமருக்கு பதவியேற்க அனுமதி அளித்துள்ள நிலையில் மூன்றாம் முறையாக அவர் அனுமதி அளிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.