டி-சர்ட்டில் இருந்த ஒரே வார்த்தை..மொத்த வயநாட்டு மக்களையும் கவர்ந்த ராகுல் காந்தி..

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றியினைப் பெற்றார். மேலும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க…

Rahul T Shirt

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றியினைப் பெற்றார். மேலும் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க எதிர்கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி. இந்நிலையில் தேர்தல் ஆணைய விதிப்படி, ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி. பதவி செல்லும் என்பதால் வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

இதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மொஹரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Boy Bestie-க்கு அச்சாரம் போட்ட நடிகர்.. கவனிக்க வைத்த தங்கலான்… இவர்தானா அது?

காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் வயநாடு தொகுதி சமீபத்தில்தான் பெரும் இயற்கைப் பேரழிவில் இருந்து மீண்டு இயல்பு நிலையில் உள்ளது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்து கடந்த சில நாட்களாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி அணிந்திருந்த டி-சர்ட்டில் இடம்பெற்ற வாசகம் தான் இப்போது எதிர்கட்சிகள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஐ லவ் வயநாடு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் அடங்கிய டி-சர்ட்டை ராகுல் அணிந்து பொதுமக்கள் முன்னிலையில் காட்ட கூட்டத்திலிருந்து பெரும் ஆரவாரம் எழுந்தது. ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த வயநாடு மக்களையும் கவர்ந்து விட்டாரே என எதிர்க்கட்சிகள் செய்வதறியாது திகைக்கின்றன. இன்றுடன் மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.