திடீரென உயிலை மாற்றிய எழுதிய வாரன் பஃபெட்.. என்ன காரணம்?

பங்குச்சந்தை வர்த்தகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் திடீரென தனது உயிலை மாற்றி எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியவருடன் இணைந்து ஒரு அறக்கட்டளையை வாரன் பஃபெட் தொடங்கினார் என்பதும் தனது சொத்துக்களின் பெரும் பகுதியை அந்த அறக்கட்டளைக்கு தானமாக அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறக்கட்டளை மூலம் கல்வி , ஏழ்மை ஒழிப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறக்கட்டளை எழுதப்பட்ட உயிரின் சொத்துக்களை தற்போது வாரன் பஃபெட் மாற்றி எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது காலத்திற்குப் பிறகு அவரது குடும்பம் சார்ந்த நான்கு அறக்கட்டளைக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் மற்றும் பில்கேட்ஸ் மெலிண்டா அறக்கட்டளைக்கு எந்த சொத்துகளும் வழங்கப்படாது என்றும் உயில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வாரன் பஃபெட் குழந்தைகளே சிறப்பான முறையில் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் அவர்களது அறக்கட்டளையை சிறப்பாக நடந்து கொண்டிருப்பதால் வாரன் பஃபெட் தனது உயிலில்  மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தான் வாழும் காலத்தில் அவருக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதி பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 18 ஆண்டுகளாக அவர் பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு தொடர்ந்து பில்லியன் கணக்கில் நன்கொடை வழன்கியுள்ளார் என்பதும் இதுவரை சுமார் 43 பில்லியன் டாலர்களை அந்த அறக்கட்டளைக்கு அவர் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.