ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இந்த ஆண்டு நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் இந்த சீசனில், வார்னர் PSL-ல் முதல் முறையாக ஆட உள்ளார்.
PSL வரலாற்றில் மிக அதிகமான தொகைக்கு வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதாவது வார்னர் கராச்சி கிங்ஸ் அணியால் 3,00,000 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டார். இது PSL வரலாற்றில் மிக உயர்ந்த ஒப்பந்தமாகும்.
சீரியஸான கேப்டன், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறனும் கொண்ட வார்னர், இடது கை தொடக்க ஆட்டக்காரர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடப்பு சீசனில் அணியை முன்னின்று நடத்துவார்” என்று கராச்சி கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
டேவிட் வார்னர், T20 கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஒரு தொடக்க வீரராகவும், உலகக்கோப்பை வென்ற அனுபவம் வாய்ந்த வீரராகவும் பெயர் பெற்றுள்ளார். பிக் பாஷ் லீக் (BBL), இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட உலகளாவிய லீக்குகளில் பல கேப்டனாகவும் இருந்துள்ளதால் கராச்சி கிங்ஸ் அணிக்கான ஒரு புதிய சாதனையை உருவாக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சீசனில் கராச்சி கிங்ஸ் 10 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து 5வது இடத்தை தான் பிடித்தது. ஆனால் அதே நேரத்தில் 2020 சீசனில் இந்த அணி PSL கோப்பையை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
“டேவிட் வார்னரை கராச்சி கிங்ஸ் குடும்பத்தில் கேப்டனாக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் அணிக்கு வெற்றி வழங்கும் வீரராகவும் இருப்பார் என்ற நம்பிக்கை உள்ள என்று கராச்சி கிங்ஸ் உரிமையாளர் சல்மான் இக்பால் தெரிவித்தார்.
கராச்சி கிங்ஸ் ஏப்ரல் 12-ஆம் தேதி தனது முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.