விண்வெளி ஆய்வில் இந்தியா மீண்டும் ஒரு புதிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் கிடைத்த புதிய தகவல்கள், அமைதியானதாக நாம் இதுநாள் வரை கருதிய நிலவு, நாம் கற்பனை செய்ததை விட பன்மடங்கு மின் ஆற்றலுடன் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பு செயலற்றதாகவும், ஒலியற்றதாகவும், புவியியல் ரீதியாக இறந்த நிலையிலும் இருப்பதாக அறிவியல் பாடப்புத்தகங்கள் கூறி வந்த நிலையில், சந்திரயான்-3 இன் சமீபத்திய கண்டுபிடிப்பு அந்த புத்தகங்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் லேண்டர் சேகரித்த தரவுகளை ஆய்வு செய்ததில், நிலவின் மேற்பரப்பில் ஒரு எதிர்பாராத அதிர்ச்சியான உண்மை வெளிப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பு ‘பிளாஸ்மா’ செயல்பாட்டுடன், அதாவது, இதற்கு முன் பதிவு செய்யப்படாத சுழலும் மின்சாரச் சூழலுடன் உயிர்ப்புடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டரில் இருந்த சென்சார்கள், ‘சிவன் சக்தி’ என்று பெயரிடப்பட்ட தரையிறங்கிய பகுதியில், மின்னேற்றப்பட்ட துகள்களின் நீரோட்டங்கள் மேற்பரப்பில் நடனமாடி, மின் ஆற்றல் உள்ளீடுகளை உருவாக்குவதை துல்லியமாக பதிவு செய்துள்ளன. எளிமையாக சொன்னால், நிலவு மின் பொறிகளை கிளப்புகிறது.
இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள், நிலவின் மெல்லிய பிளாஸ்மா சூழல், அது மின்சார ரீதியாக நியூட்ரலாக இருந்தாலும், மிகவும் ஆக்டிவ் உடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, இந்த பிளாஸ்மா மிகவும் கடத்தும் திறன் கொண்டதுடன் மின்காந்த புலங்களுக்கு வலுவாக பதிலளிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இது நிலவின் மேற்பரப்பு குறித்த நமது முந்தைய புரிதலுக்கு முற்றிலும் முரணானது.
மின்சார செயல்பாடுகள் கொண்ட இந்த நிலவு சூழல், எதிர்கால விண்வெளி பயணிகளுக்கு நன்மைகளையும் தீமைகளையும் ஒரே நேரத்தில் வழங்கும் என கருதப்படுகிறது. ஒருபுறம், மின்னேற்றப்பட்ட இந்த நிலவு சூழல், எதிர்கால விண்வெளி பயணங்கள் ஆற்றலை பெற உதவக்கூடும். ஆனால், மறுபுறம், இந்த பிளாஸ்மா செயல்பாடு, நிலவில் நீண்ட காலம் தங்கும் விண்வெளி வீரர்கள் மற்றும் நீண்ட கால நிலவு தளங்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய மின் காந்த குழப்பங்களை உருவாக்கக்கூடும் என்பதால், இது ஒரு சவாலாக உள்ளது.
இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம், 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திரம் படைத்தது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கிய உலகின் நான்காவது நாடாகவும், நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல் நாடாகவும் இந்தியா பெருமை பெற்றது. இந்த சாதனை, சர்வதேச விண்வெளி சமூகத்தில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்தியது.
இந்த மகத்தான வெற்றிக்கு பிறகு, இந்தியா தற்போது சந்திரயான்-4 திட்டத்திற்கு தயாராகி வருகிறது. 2027 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து, அதனை அறிவியல் ஆய்வுகளுக்காக பூமிக்கு திரும்ப கொண்டுவருவதாகும். சந்திரயான்-3 இன் புதிய பிளாஸ்மா கண்டுபிடிப்பு, இந்த எதிர்கால மாதிரிகளின் ஆய்வின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் அதிக அளவில் மின்சார ஆற்றல் கொட்டிக்கிடப்பதை இந்தியா அனுப்பிய விக்ரம் லேண்டர் கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது. நிலவின் சுற்றுப்புறம் உயிர்ப்புடன், மின்னேற்றப்பட்ட துகள்களின் நீரோட்டத்துடன் இருப்பதை இஸ்ரோ தகவல்கள் உறுதிப்படுத்தியிருப்பது உலக விண்வெளி சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நிலவில் இருந்து இந்த மின் ஆற்றலை பூமிக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியுமானால், அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்குவது சாத்தியமாகும் என்பதுடன், இது உலகளவில் ஒரு மிகப்பெரிய தொழிற்புரட்சிக்கு வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
