விஜய் வெளியே வந்தாலே போதும், அவர் பெரிய அளவில் எதுவும் பேச வேண்டியதில்லை. அவருக்கு நாள் ஆக ஆக வாக்குகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது” என்றும், “குறைந்தபட்சம் 80 லட்சம், அதிகபட்சமாக 1 கோடியே 6 லட்சம், சராசரியாக 94 லட்சம் வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும்’ என்றும் தேர்தல் வியூக நிபுணர் ஸ்ரீராம் என்பவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப்பேச்சு தேர்தல் விமர்சகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் எடுத்த சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் தான் வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன். அதன் பிறகு மே மாதம் எடுத்த சர்வேயில் அவருக்கு 9% வாக்குகள் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன். ஆனால், இன்று தேர்தல் நடந்தால் அவருக்கு 22 சதவீத வாக்குகள் உறுதி. மொத்தம் 4 கோடி வாக்குகள் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 80 லட்சம், அதிகபட்சம் 1 கோடி 6 லட்சம், சராசரியாக 94 லட்சம் வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும்’ என்று ஸ்ரீராம் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு சுமார் 2 கோடியே 9 லட்சம், அதிமுக கூட்டணிக்கு சுமார் 1 கோடியே 83 லட்சம் வாக்குகள் கிடைத்தன. இந்த இரண்டு கூட்டணிகளின் வாக்குகளில் தான் தற்போது விஜய் கை வைக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு கூட்டணிகளையும் சேர்த்து நான்கு கோடி வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதில் ஒரு கோடி வாக்குகளை விஜய் கபளீகரம் செய்கிறார் என்றால், இரண்டு கூட்டணிக்குமே மிகப்பெரிய அடி விழும். குறிப்பாக அதிமுக கூட்டணியின் வாக்குகள் கணிசமாக குறையும். அப்படி இருக்கும்போது, விஜய் கண்டிப்பாக ஒன்று ஆட்சி அமைப்பார் அல்லது இரண்டாவது இடத்தை பிடித்துவிடுவார் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும், இது இன்றைய நிலை தான். இன்னும் தேர்தலுக்கு 8 மாதம் உள்ளது. அதற்குள் தமிழகம் முழுவதும் இரண்டு அல்லது மூன்று முறை விஜய் சுற்றுப்பயணம் செய்தால் நிலைமை இன்னும் மாறும். இன்று இருக்கிற ஒரு கோடி, ஒன்றரை கோடி அல்லது 2 கோடியாக கூட மாற வாய்ப்பு உள்ளது. எனவே, விஜய்யின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் தான் அவரது வெற்றி எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை கூற முடியும் என்று தேர்தல் வியூக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
