கைதாவதற்கு விஜய் தயாராகிவிட்டார்.. இனி ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல, அதிர்ச்சியான நடவடிக்கைகளும் இருக்கும்: ராஜ்மோகன்

  அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அடுத்த கட்டமாக பரந்தூர் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அதனை தொடர்ந்து யாரும் எதிர்பாராத சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

vijay4

 

அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு விஜய் தலைமையில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அடுத்த கட்டமாக பரந்தூர் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அதனை தொடர்ந்து யாரும் எதிர்பாராத சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி ராஜமோகன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. அதற்குள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் என்பதும், குறிப்பாக அஜித்குமார் மரணம் மட்டுமின்றி, இதற்கு முன்பு லாக்கப் டெத்தில் இறந்த 24 பேரின் குடும்பத்தையும் மேடை ஏற்றி, அவர் “அனைவரிடமும் ‘சாரி’ கேளுங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் சார்” என்று கூறியது பழுத்த அரசியல்வாதிகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு ஊர்வலமாக விஜய் செல்வார் என்றும், அப்போது போலீசார் தடுத்தால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்றும், அப்போது விஜய் கைதாவதுக்கு கூட தயாராகிவிட்டார் என்றும் ராஜமோகன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இனி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மட்டுமின்றி சில அதிரடி நடவடிக்கைகளும், அதிர்ச்சியான நடவடிக்கைகளும் இருக்கும் என்றும், “அதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறியிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விஜய்க்கு 20 முதல் 30 சதவீத வாக்குகள் இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், முழுமையான போட்டியில் 35 சதவீதம் வாக்குகள் பெற்றாலே ஒரு கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிடும் என்றும், அந்த வகையில் ஆட்சியை தமிழக வெற்றிக் கழகம் நெருங்கிவிட்டதாகவே கூறப்பட்டு வருகிறது.