சும்மா இந்த உதார் விடுற திட்டம் எல்லாம் இருக்கக் கூடாது.. தவெக மாநாட்டில் விஜய் பேச்சு..

By John A

Published:

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசினார். இதில் ஊழல், பிளவுவாத அரசியல் ஆகியவை குறித்தும் பேசினார். விஜய் பேசியதாவது: இந்த பிளவுவாத சக்திகளைக் கூட நாம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அது மதம் பிடித்த யானை போன்றது. அது காட்டிக் கொடுத்து விடும். ஆனால் இந்த ஊழல் இருக்கே.. அது எங்க ஒளிஞ்சிருக்கு.. எப்படி ஒளிஞ்சிருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியாது. கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடும்.

கலாச்சாரப் பாதுகாப்பு வேஷமும் போடும்.. அதுக்கு முகம் இருக்காது. முகமூடிதான் முகமே..இப்படி முகமூடி போட்ட கலெக்ஷன் கபடதாரிகள் தான் நம்ம கூட இருக்காங்க..நம்மோட ஒரு எதிரி பிளவுவாத சக்திகள்.. மற்றொரு எதிரி ஊழல் கபடதாரிகள்..

நம் மக்களுக்கு இங்கு தெளிவாகத் தெரியும்.. யார் வேண்டும் யார் வரக்கூடாது என்று.. ஏன்னா இது மதச்சார்பின்மை பேசுற தமிழ்நாட்டு மண். பெரியார், அண்ணா, காமராசர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் பிறந்த ஊர். இங்கு இந்து முஸ்லீம், கிறிஸ்தவர் எல்லாமே வழிபாட்டு முறையில் தான் வேறுபாடு இருக்கும்.

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் தெரியுமா? மாநாட்டு மேடையில் கர்ஜித்த விஜய்…

ஆனா ஒட்டுமொத்தமா தமிழ்நாடுன்னு வந்துட்டா.. ஒற்றுமையா வந்துட்டா ரொம்ப ரொம்ப கஷ்டம். இங்க சாதி இருக்கும்.. ஆனா சைலண்ட்டா இருக்கும்.. சமூக நீதிக்கான அளவுகோலா மட்டுமே இருக்கும்..அதவச்சு நாம மண்ணை மாத்தலாம்னா மக்கள் அனுமதிக்க மாட்டாங்க..ஏன்னா அது மண்ணுல அது அரசியல் முத்திரை விழுந்த கருத்தியல்.

இதான் என்னோட அரசியலான்னு கேட்டா கிடையாது. மகத்தான அரசியல்ன்னா அது மக்களுக்கான அரசியல்தான். மக்களுக்காக மக்களோடு மக்களா அவங்கள்ல ஒருத்தனா எப்பவுமே மாறாம நிற்கிறது தான் என்னோட நிரந்தர அரசியல் பாதை.. தேர்வு எழுதியவுடன் ரிசல்ட் வருகிற மாதிரி நல்ல ரிசல்ட் கொடுக்கிற திட்டங்களைத் தீட்டனும்.. அதை முறையா அமல்படுத்தனும்.. முறையா மக்கள்கிட்ட சேர்ந்திருச்சான்னு பார்த்துக்கிட்டே இருக்கணும். சோறுன்னு சொல்லிட்ட பசியாறாது. சோறு சாப்பிட்டாதான் பசியாறும். மக்களுக்காக நாம கொண்டுவர திட்டம் எல்லாம் பிராக்டிகலான திட்டமா இருக்கணும். சும்மா இந்த உதார் விடுற திட்டமாக இருக்கக் கூடாது. முடிஞ்சவங்க மீன் பிடிச்சு வாழட்டும். முடியாதவங்களுக்கு கற்றுக் கொடுத்து வாழ வைப்போம்..” இவ்வாறு மாநாட்டில் விஜய் பேசினார்.