ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு தவெக உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.. 234 தொகுதியிலும் விஜய் செய்ய போகும் மாயாஜாலம்.. ஆட்சியை பிடித்தபின் செய்யும் கட்சி அல்ல தவெக.. தேர்தலுக்கு முன்பே நலத்திட்டங்கள்.. சொந்த காசில் குறை தீர்ப்பு.. அதுதான் தவெக..!

தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் தலைவர் விஜய், வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை…

vijay2

தமிழக வெற்றி கழகம்’ கட்சியின் தலைவர் விஜய், வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை எட்டும் நோக்கில், புதிய வியூகத்தை வகுத்து, களப்பணியை முடுக்கிவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், உறுப்பினர் சேர்க்கை பணியானது ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பில் இருந்து, தொகுதி வாரியான பொறுப்பாளர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, ‘ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு’ சென்று உறுப்பினர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற விஜய்யின் நேரடி உத்தரவின் ஒரு பகுதியாகும்.

விஜய், பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது தவெக நிர்வாகிகள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொஉ கிராமங்கள் தோறும் சென்று, கட்சியின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும்.

முந்தைய அ.தி.மு.க. மற்றும் தற்போதைய தி.மு.க. ஆட்சிகளின் குறைகள் மற்றும் அவலங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இதுவரை எந்த அரசியல்வாதிகளும் செல்லாத குக்கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு சென்று, அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கண்டறிய வேண்டும்.

கிராமப்புறங்களில் ஏதேனும் முக்கிய கோரிக்கைகள் இருந்தால், அவற்றை உடனடியாக நிறைவேற்ற தேவையான நிதி உதவிகளை தர விஜய் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். இந்த உத்தரவுகளால், த.வெ.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் களப்பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த வியூகம், கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதோடு, மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. ஒரு புதிய கட்சி, தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்த இதுபோன்ற அடிமட்டப் பணிகளை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.

விஜய்யின் 2 கோடி உறுப்பினர்களை எட்டுவதில் பெரிய சவால்கள் இருக்காது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் இருந்து வரும் நிலையில் அடுத்த சில மாதங்களில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது என்பது ஒரு சாத்தியமான பணிதான் . ஆனால் அதே நேரத்தில் வெறும் உறுப்பினர் சேர்க்கையுடன் நின்றுவிடாமல், அந்த உறுப்பினர்களை தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது, அவர்களை தக்கவைப்பது மற்றும் அவர்களின் ஆதரவை வாக்குகளாக மாற்றுவது ஆகியவை அடுத்த கட்ட சவால்களாக இருக்கும்.

விஜய்யின் இந்த முயற்சி, தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.