இன்றைய நிலையில் விஜய் கட்சிக்கு 2வது இடம்.. அதிமுகவை முந்திவிட்டது.. இன்னும் 6 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. இளைஞர்களின் மின்னல் வேக சமூக வலைத்தள பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்தால் ஆட்சிமாற்றம் உறுதி.. இல்லையேல் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

அதிமுக இன்றைக்கு திமுகவை வீழ்த்தும் அளவுக்கு வலிமையாக இல்லை என்றும், மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கள நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியவர்கள் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், அதிமுகவின்…

vijay eps stalin

அதிமுக இன்றைக்கு திமுகவை வீழ்த்தும் அளவுக்கு வலிமையாக இல்லை என்றும், மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கள நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியவர்கள் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், அதிமுகவின் பழைய வாக்கு வங்கி இப்போது இருக்காது என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மிக அதிக அளவில் நடிகர் விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. களத்தில் அதிமுகவை முந்திக்கொண்டு த.வெ.க இன்றைய நிலையில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், இன்னும் 6 மாதங்களில் முதலிடத்தை நோக்கி நகரலாம் என்றும் கூறப்படுகிறது.

பலதரப்பட்ட மக்களுடன் உரையாடியதன் அடிப்படையிலும், விஜய்யின் கூட்டங்களில் காணப்படும் எழுச்சியை பார்த்தும், அவரது பொதுக்கூட்டங்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கையின் பேரிலும், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு 20 முதல் 25% வாக்குகளுக்கு கீழே போக வாய்ப்பில்லை என்றும் அரசியல் நோக்கர்கள் உறுதியாக கூறுகின்றனர். இது மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் ஆதரவையும் பிரதிபலிக்கிறது.

அதிமுகவில் அதிருப்தி மனநிலையில் உள்ளவர்கள் சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் வேட்பாளர் தேர்வு செய்யும்போது, பணம் படைத்தவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டு, உழைத்த கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால், அவர்கள் பெரிய கும்பிடாக போட்டுவிட்டு, தவெக பக்கம் தாவுவதற்கு தயாராவார்கள். முன்னாள் அதிமுக அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ள நிலையில், அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை இனம் கண்டு கட்சிக்கு கொண்டு வரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தவெக பக்கம் செல்வது என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுக்குமானால், அது தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கோ அல்லது யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலுக்கோ வழிவகுக்கும் என்றும், ஆனால் இந்த புத்திசாலித்தனமான முடிவை எடுக்கக் காங்கிரஸ் தலைமை அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, வரும் தமிழக தேர்தலில் போட்டி நான்கு முனையாக இருக்காது என்றும், மூன்று முனையாகத்தான் இருக்கும் என்றும், அதில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக இரண்டாம் இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.