தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அரசியலில் தடம் பதிப்பதற்கு முன்பே ஒரு மிகப்பெரிய ‘நிழல் யுத்தத்தை’ வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் என்பதுதான் தற்போதைய கள நிலவரம். அவரை மேலோட்டமாக பார்த்துவிட்டு விமர்சிப்பவர்கள், அவர் எந்த தயாரிப்பும் இல்லாமல் திரையில் இருந்து அரசியலுக்கு வந்துவிட்டதாக கருதுகிறார்கள். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் துல்லியத்துடன் Risk Management ஆய்வை விஜய் செய்துள்ளார். தான் அரசியலுக்கு வந்தால் என்னென்ன தடைகள் வரும், எந்தெந்த தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பும், தன் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் எப்படியிருக்கும் என ஒரு நீண்ட பட்டியலை தயாரித்து, அதற்கான தீர்வுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளார்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர் எதிர்பார்த்த முட்டுக்கட்டைகளில் பாதிகூட தற்போது வரை அவருக்கு வரவில்லை. ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கும்போது எழும் ஆரம்பகால சிக்கல்களை விட, மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஏற்புத்திறன் மிக அதிகமாக இருப்பதை அவர் உணர்ந்துள்ளார். இதற்காக அவர் ஏனோதானே என்று செயல்படாமல், ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட ஏஜென்சி மூலம் தமிழகம் தழுவிய ரகசிய சர்வேக்களை எடுத்து வருகிறார். இந்த சர்வே முடிவுகள் ஒவ்வொன்றும் அவருக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளன. இதுவரை எடுக்கப்பட்ட எந்த ஒரு ஆய்விலும் அவருக்கு “நெகட்டிவ்” என்று சொல்லக்கூடிய முடிவுகள் வரவில்லை என்பதுதான் அவரது அபாரமான தன்னம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.
விஜய்யின் இந்த அரசியல் நகர்வு என்பது வெறும் உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல, அது ஒரு கணக்கிடப்பட்ட வியூகம். மற்ற அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் பேசுவதை வைத்து தங்கள் செல்வாக்கை மதிப்பிடும் நிலையில், விஜய் தரவுகளையும் மக்களின் உண்மையான மனநிலையையும் மட்டுமே நம்புகிறார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இதுவரை எந்த கட்சிக்கும் வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு அவருக்கு பெரும் பலமாக உருவெடுத்துள்ளது.
மற்றவர்கள் அவரை இளக்காரமாக பேசினாலும், அவர் தனது இலக்கில் மிக தெளிவாக இருப்பதற்கு இந்த பக்காவான திட்டமிடலே காரணம். எதிர்ப்புகளை எதிர்கொள்ள அவர் தயார் நிலையில் இருந்தும், மக்கள் காட்டும் பேராதரவு அவரை இன்னும் உற்சாகமாக களமிறங்க வைத்துள்ளது. வரும் நாட்களில் இந்த “சைலன்ட் ஸ்கெட்ச்” எந்த அளவுக்கு தீவிரமடையும் என்பதை பார்த்து தமிழக அரசியல் கட்சிகள் திகைக்கப்போவது உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
