தமிழக அரசியலில் தற்போது வீசி வரும் ‘தளபதி’ காற்று, 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கிய ஒரு மிகப்பெரிய சூறாவளியாக உருவெடுத்துள்ளது. “நான் அடிச்ச 10 பேரும் டான் தான்” எனத் திரையில் ஒரு ஹீரோ பேசிய வசனத்தை போலவே, நிஜ அரசியலிலும் அவர் ஆளும் தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி என பல முனை தாக்குதல்களை தொடுத்து வருகிறார்.
இதுவரை எத்தனையோ சூப்பர் ஸ்டார்களும், முன்னணி நடிகர்களும் தமிழக அரசியலில் களம் கண்டிருக்கலாம், ஆனால் அவர்கள் யாரும் விஜய் அல்ல என்ற முழக்கம் தமிழக வெற்றி கழகத் தொண்டர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது. மற்ற நடிகர்களின் அரசியல் வரவுக்கும் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம், அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத இளைஞர் பட்டாளம் மற்றும் தெளிவான இலக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சமீபகாலமாக தவெக தொண்டர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வீடு வீடாக சென்று மேற்கொண்டு வரும் ரகசிய கருத்துக்கணிப்புகள் மற்றும் கள ஆய்வுகளில் பல ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பாரம்பரியமாக திமுக மற்றும் அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளின் வீட்டு வாரிசுகள், இந்த முறை தங்களது வாக்குகளை விஜய்க்கே அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. திராவிட கட்சிகளின் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் புகார்களால் சலிப்படைந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள், ஒரு புதிய மாற்றத்திற்காக விஜய்யை நோக்கி நகர்வது இந்த ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகிகள் அதீத தன்னம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் வெறும் சினிமா ரசிகர்களை மட்டும் ஈர்க்கவில்லை; மாறாக, அரசியலில் மாற்றத்தை விரும்பும் நடுநிலை வாக்காளர்களையும் கவர்ந்து வருகிறது. திராவிட கட்சிகள் பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்தாலும், தற்போதைய இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டன என்ற வாதத்தை விஜய் முன்னிறுத்துகிறார். “எல்லோருக்கும் எல்லாம்” என்ற முழக்கம் ஒருபுறம் இருந்தாலும், நடைமுறையில் இருக்கும் சவால்களை பேச விஜய் தயங்குவதில்லை. இதனால், பல ஆண்டுகளாக திராவிட இயக்கங்களுடன் பயணித்த குடும்பங்களிலேயே ஒரு பிளவு ஏற்பட்டு, வாரிசு அரசியல் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவதாகத் தெரிகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை, திராவிட கட்சிகள் ‘வாஷ் அவுட்’ ஆக போவது உறுதி என தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சவால் விடுத்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் வெறும் தலைகளை மட்டும் காட்டவில்லை, அது ஆளும் தரப்பிற்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்பட்டது. அதிமுகவின் கோட்டைகளாக கருதப்படும் இடங்களிலும், திமுகவின் செல்வாக்கு மிக்க மண்டலங்களிலும் விஜய் தவெகவின் கொடி பறக்க தொடங்கி இருப்பது, தமிழக அரசியல் களம் ஒரு இருமுனை போட்டியில் இருந்து மும்முனை போட்டிக்கு அல்லது ஒரு மாற்றத்திற்கான களமாக மாறி வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், விஜய்யின் “பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இடமில்லை” என்ற கொள்கை, அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. சாதி, மத எல்லைகளை கடந்து ஒரு தலைவராக தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் முயற்சியில் அவர் வெற்றி பெற்று வருவதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, முதல்முறை வாக்களிக்க போகும் லட்சக்கணக்கான இளைஞர்கள் விஜய்யையே தங்களது முதல் தேர்வாக வைத்துள்ளனர். இந்த இளைய தலைமுறை மாற்றமே 2026-ல் ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவாக, தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி என்பது வெறும் சினிமா மோகத்தால் வந்தது அல்ல; அது பல ஆண்டுகால அரசியல் தேக்கநிலைக்கான வடிகாலாக மாறியுள்ளது. வெற்றியோ தோல்வியோ, மக்கள் நலனுக்காகவும் அடிப்படை மாற்றத்திற்காகவும் விஜய் சண்டையிடுகிறார் என்ற பிம்பம் மக்கள் மத்தியில் வலுவாக பதிந்துள்ளது.
கோடிகளில் புரளும் மற்ற நடிகர்கள் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தயங்கும் நிலையில், விஜய் தனது திரைப்பயணத்தை விட்டுவிட்டு நேரடியாக போராட்ட களத்தில் நிற்பது அவருக்கு ஒரு தனி மரியாதையை தேடித்தந்துள்ளது. 2026 தேர்தல் முடிவு எப்படியிருப்பினும், தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
