Vijay is a Massive Power.. ரெண்டு சனியனும் வேணாம்ன்னு சொல்றவங்க 30% இருக்காங்க.. இதை ஒத்துக்கிடலைன்னா கண்ண மூடிக்கிட்டு இருக்கிங்கன்னு அர்த்தம்.. பெலிக்ஸ் ஜெரால்டு

“விஜய் ஒரு மாஸ் பவர் உள்ள தலைவர். இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு அரசியலை பார்க்கிறார்கள் என்று அர்த்தம்” என்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கஸ்டடி…

vijay

“விஜய் ஒரு மாஸ் பவர் உள்ள தலைவர். இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு அரசியலை பார்க்கிறார்கள் என்று அர்த்தம்” என்று ஃபெலிக்ஸ் ஜெரால்டு பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கஸ்டடி மரணங்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால், இந்த விஷயத்தை கையில் எடுத்து எந்த ஒரு அரசியல் கட்சியும் போராடவில்லை. தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே போராட்டம் நடத்தின. மற்ற கட்சிகள், அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியும் இதற்கு போராடவில்லை. ஆனால், போராட்டம் நடத்திய விஜய்யை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்ற கேள்வி ஒன்றுக்கு ஃபெலிக்ஸ் ஜெரால்டு பதிலளித்தார். “இதற்குப் போராடாமல் வேறு எதற்குப் போராட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “24 கஸ்டடி மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மேடையேற்றியது ஒரு பெரிய விஷயம்” என்று கூறினார்.

மேலும், “விஜய் முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்” என்று கூறியவர், “ஜெயலலிதா போன்ற பவர் உள்ளவர்” என்றார். “ஜெயலலிதாவோடு விஜய்யை எப்படி ஒப்பிட முடியும்? விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை, தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் இல்லை” என்று கேள்விக்க்கு “விஜய்யின் ரசிகர்கள் நூறு பேருக்கு மேல் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே, அவருக்கு தேர்தல் அனுபவம் இல்லை என்று கூறுவது தவறு” என்று பதிலளித்தார்.

“தமிழக அரசியலை பொறுத்தவரை விஜய் ஒரு மாஸ் பவர். இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் அரசியலை புரிந்து கொள்ளாத தெளிவில்லாதவர்கள்” என்று அவர் கூறினார். மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரண்டு கட்சிக்கு மாறி மாறி ஓட்டு போட்டு “ரெண்டு சனியனுமே வேண்டாம்” என்று நினைப்பவர்கள் 30% பேர் இருக்கிறார்கள். அந்த 30% அப்படியே விஜய்க்கு விழுந்தால் விஜய் ஆட்சியை பிடித்துவிடுவார் என்றும் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார்.

“வரும் தேர்தலில் விஜய் மீதுதான் அனைத்து ஊடகங்களின் கவனமும் இருக்கும். விஜய் பிரச்சாரத்துக்கு கிளம்பிவிட்டார், விஜய் பிரச்சாரம் செய்யப் போகிறார், விஜய் பிரச்சாரம் செய்கிறார் என்று ஃபிளாஷ் நியூஸ் வந்துகொண்டே இருக்கும். விஜய் மட்டும் பிரச்சாரத்தை மிகவும் சரியாக திட்டமிட்டு, இரண்டு கூட்டணிகள் மீதும் அதிருப்தியில் இருக்கும் அந்த 30 சதவீத வாக்குகளை பெற்றுவிட்டால், அவர்தான் முதலமைச்சர். அவர் தலைமையில் தான் ஆட்சி” என்றும் மற்றொரு கேள்விக்கு பெலிக்ஸ் ஜெரால்டு பதிலளித்தார்.

மொத்தத்தில், வரும் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் சக்தியாக இரண்டு திராவிட கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளவர்கள் தான் இருக்கிறார்கள் என்பது இந்த பேட்டியில் இருந்து தெளிவாகிறது.