இதென்னா சினிமாவா.. விஜய் அரசியலில் ஒரு குழந்தை.. அவரை நம்பி யாரும் வரமாட்டார்கள்.. த்ரிஷா தான் துணை முதல்வர்.. பத்திரிகையாளர் உமாபதி

விஜய் அரசியலில் ஒரு குழந்தை, அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி என்பவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழக…

umapathi

விஜய் அரசியலில் ஒரு குழந்தை, அவரை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி என்பவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், “திமுகவுடனும் கூட்டணி இல்லை, பாஜகவுடனும் கூட்டணி இல்லை, தனித்து ஒரு கூட்டணி அமைப்பேன்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, “தன்னுடைய கூட்டணிக்கு வரும் கட்சியின் தலைவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பேன்” என்றும் கூறியுள்ளார். ஆனாலும், அவரது கூட்டணிக்கு இதுவரை எந்தக் கட்சியும் வரவில்லை. இந்த நிலையில் தான், யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த பத்திரிகையாளர் உமாபதி, “விஜய்யை நம்பி யாரும் வர மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

“அதிமுக தோன்றிய காலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ளார். அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர், தற்போது அதிமுக பொதுச் செயலாளராகவும் உள்ளார். அப்படிப்பட்ட பாரம்பரிய கட்சியில் உள்ள எடப்பாடி பழனிசாமி, விஜய் கூட்டணிக்கு எப்படி வருவார்? விஜய் முதல்வர், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் என்பதை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அப்படி ஒருவேளை ஏற்றுக்கொண்டால், அவருடைய வீட்டிலேயே அவருக்கு சோறு போட மாட்டார்கள்” என்று பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்தார்.

“அரசியலைப் பொறுத்தவரை விஜய் ஒரு குழந்தை. அவர் சொல்வதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தை ‘இனிமேல் என்னுடைய பேச்சைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும்’ என்று கூறினால், பெரியவர்கள் எல்லாரும் சிரிப்பார்கள் அல்லவா? அதுபோல்தான் விஜய்யின் பேச்சை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறார்கள். விஜய் ஒரு நடிகர், நன்றாக டான்ஸ் ஆடுவார், பாட்டு பாடுவார். அவர் வந்தால் கூட்டம் கூடும் என்பது உண்மைதான். ஆனால், அதற்காக யாரும் ஓட்டு போடுவார்கள் என்று நினைக்க வேண்டாம்” என்றும் உமாபதி தெரிவித்தார்.

“திரிஷாவுடன் டான்ஸ் ஆடி பாட்டு பாடிய விஜய் முதல்வர் ஆகலாம் என்றால், விஜய்யுடன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய திரிஷா ஏன் துணை முதல்வராக கூடாது? தாராளமாக அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம், பதவியும் பெறலாம். ஒரு பெண் அரசியலுக்கு வருவது நல்லதுதானே?” என்றும் பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்தார்.

மொத்தத்தில், “விஜய்க்கு அரசியல் தெளிவு கிடையாது. அவர் அரசியலில் ஒரு குழந்தைதான். இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை நம்பி எந்த கட்சியும் கூட்டணிக்கு வராது. அவரால் ஆட்சி அமைக்கவும் முடியாது” என்று உமாபதி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களோ, இந்த வீடியோவின் கமெண்ட் பதிவில், “புதிதாக கட்சி ஆரம்பித்த பலர் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், என்.டி.ஆர் போன்றவர்கள் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ளனர். அரசியலில் ஒரு குழந்தையாக இருக்கலாம். ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான மனப்பான்மையுடன் விஜய் உள்ளார். எனவே மக்கள் அவரை நிச்சயம் நம்புவார்கள்” என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.