பாஜக கூட்டணிக்கு விஜய் போய்விட்டால் நாம குளோஸ்.. எதிர்ப்பை குறைத்த விசிக.. அடக்கி வாசிக்கும் திமுக.. ரகசிய பேச்சுவார்த்தையில் காங்கிரஸ்.. தூண்டில் போடும் பாஜக.. விஜய்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த அண்ணாமலை.. விஜய் முடிவு என்னவாக இருக்கும்?

கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்து, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடித்துவிடும் என்று சில அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், நிலைமை தலைகீழாக மாறி, இந்த சம்பவம்…

vijay namakkal

கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்து, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை ஒட்டுமொத்தமாக முடித்துவிடும் என்று சில அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், நிலைமை தலைகீழாக மாறி, இந்த சம்பவம் விஜய்யை அரசியல் ரீதியாக பலப்படுத்தியதோடு, அவரை தங்கள் கூட்டணிக்குள் இணைக்க பிரதான கட்சிகளிடையே தீவிர போட்டி ஏற்பட காரணமாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் விபத்து தொடர்பாக விஜய் மற்றும் அவரது கட்சியின் மீதான சட்ட நெருக்கடிகள் அதிகரித்தபோது, விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க.வும் காங்கிரஸும் வெளிப்படையாகவும் ரகசியமாகவும் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் சம்பவத்திலிருந்து உங்களை காப்பாற்றி, சட்ட சிக்கல்களை தீர்க்கிறோம், அதற்கு பதிலாக எங்கள் கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று பா.ஜ.க. தரப்பில் பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என்றும், “நாம் இருவரும் கூட்டணி அமைப்போம்; பா.ஜ.க-வின் அரசியல் நெருக்கடியிலிருந்து உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம்” என்றும் காங்கிரஸ் தரப்பிலிருந்தும் விஜய்க்கு அழைப்பு வந்திருப்பதாக தெரிகிறது. இந்த இரண்டு தேசியக் கட்சிகளின் அழைப்பும், கரூர் விவகாரம் விஜய்யின் அரசியல் பயணத்தின் ஒரு திருப்புமுனை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்வைக் காலி செய்யும் என்று எதிர்பார்த்த கட்சிகள் அனைத்தும் தற்போது அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளன. முன்னதாக, விஜய் மீது ஆவேசமாக குற்றம் சாட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளார். “கரூர் மரணங்கள் ஒரு துரதிர்ஷ்டமான விபத்துதான். இதில் யாருக்கும் கிரிமினல் உள்நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் விஜய்யைக் குற்றம் சொல்லவில்லை” என்று அவர் தற்போது கூறி வருகிறார்.

அதேபோல், ஆளும் கட்சியான தி.மு.க. தலைவர்களும் தற்போது விஜய் மீதான விமர்சனத்தை குறைத்து, அடக்கி வாசிக்கின்றனர். கரூர் விவகாரத்தில் விஜய்க்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், அவர் கோபத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றுவிடுவார் என்றும், அப்படி நடந்தால், அ.தி.மு.க. – பா.ஜ.க. – தவெக கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் தி.மு.க. அஞ்சுவதாக கூறப்படுகிறது. இந்த அரசியல் காய் நகர்த்தல்களை கருத்தில் கொண்டே தி.மு.க. தனது விமர்சனங்களின் வேகத்தை குறைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில், காங்கிரஸின் அழைப்பை ஏற்று விஜய் அவர்களுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது சட்ட நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியின் சார்பாகச்செல்வாரா என்பதுதான் தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

மொத்தத்தில், கரூர் விபத்து தமிழக அரசியலில் விஜய்யின் வீழ்ச்சிக்கு வழிவகுக்காமல், மாறாக அவரை ஒரு தவிர்க்க முடியாத பேரம் பேசும் சக்தியாக மாற்றியுள்ளது. விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் அறிவிப்பை தெரிந்துகொள்ள தமிழகமே பரபரப்புடன் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.