நான் என்ன கொலையா செய்துவிட்டேன்? இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்.. விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க முடியாமல் பாஜக திணறல்.. ஆர்வம் காட்டாத அண்ணாமலை.. அதிகபட்சம் அதிமுகவுடன் மட்டுமே கூட்டணி.. அதிலும் 117+117 ஃபார்முலா தான்.. கறாராக சொன்னாரா விஜய்?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க. தலைமை மேற்கொண்ட தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க.வுடன் மட்டும் கூட்டணி விஜய் கூட்டணி…

vijay eps annamalai

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க. தலைமை மேற்கொண்ட தீவிர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க.வுடன் மட்டும் கூட்டணி விஜய் கூட்டணி வைக்கலாம் என்றும், அதிலும் சில நிபந்தனைகளுடன் இணைய விஜய் தயாராக இருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பா.ஜ.க. தலைமை மறைமுகமாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பா.ஜ.க. தலைமை தரப்பில் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களிடம் விஜய், “கரூர் சம்பவத்தை வைத்து என்னை மிரட்டுவதற்கு என்ன காரணம் இருக்கிறது? கரூர் சம்பவத்திற்கு நான் தான் காரணம் என்பதை நீங்கள் எப்படி சொல்லலாம்?” என்று பதில் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கரூர் சம்பவத்தை தான் சட்ட ரீதியாகவும், அதன் விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் அவர்களிடம் கறாராக பதிலடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

ஆனால், அதே நேரத்தில், அதிகபட்சம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்மதமும் ஒரு கடுமையான நிபந்தனையுடன் இணைக்கப்பட்டுள்ளது:

அ.தி.மு.க.வுடனான கூட்டணியில், இரு கட்சிகளுக்கும் தலா 117 + 117 தொகுதிகள் என்ற சமபங்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும். யார் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறாரோ, அவரே முதலமைச்சராக பதவியேற்க வேண்டும். முதலமைச்சர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்கக் கூடாது.

இந்த ஃபார்முலாவுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால், அவர் பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து விலக்கிக்கொண்டு, த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே, அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. கூட்டணி அமைந்தால், அது மாபெரும் வெற்றி கூட்டணியாக மாறும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

விஜய்யை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர அண்ணாமலை எந்தவிதமான முயற்சியும் ஆர்வமும் காட்டவில்லை என்றும் தகவல்கள் கசிகின்றன.தனது தலைமை பதவியை மேலிடம் பிடுங்கிவிட்டதால் அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும், அப்படியே யாராவது விஜய்யிடம் பேச சொன்னாலும், தலைவர் பதவியில் இருக்கும் நயினார் நாகேந்திரன் பேச சொல்லுங்கள்” என்று நழுவிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இது, பா.ஜ.க.வின் மாநில தலைமைக்குள் நிலவும் குழப்பத்தைப் பிரதிபலிக்கிறது.

மறுபுறம், காங்கிரஸ் கட்சி, த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து தயக்கத்துடனே உள்ளது. த.வெ.க.வை நம்பி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்தால், 2029 மக்களவை தேர்தலில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகுதிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான், த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் யோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் யோசனையை விஜய் முற்றிலுமாக கைவிட்டு, கூட்டணி கதவை மூடிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் ஒன்று தனித்து போட்டியிடும் அல்லது பா.ஜ.க. இல்லாத அ.தி.மு.க.வுடன் மட்டுமே சமபங்கீட்டு நிபந்தனையின் அடிப்படையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.