டிடிவிக்கும் இடமில்லை.. ஓபிஎஸ்-க்கும் இடமில்லை.. விஜய் கறார் முடிவு.. மீண்டும் என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி? 9 தொகுதிகள் 1 ராஜ்யசபா.. திமுக கூட்டணிக்கு செல்கிறார் ஓபிஎஸ்? கட்சியில் ஒரு பதவி, 4 தொகுதிகள்.. திரிசங்கு நிலைமையில் தேமுதிக.. விஜய்’ கதவை திறப்பாருன்னு எல்லோரும் காத்திருந்தாங்க.. ஆனால் அவர் கதவை பூட்டிட்டு சாவியை மக்கள்கிட்ட கொடுத்துட்டாரு! இது கூட்டணி கணக்கு இல்ல, மக்களோட மனக்கணக்கு!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுக்கப்போகும் முடிவுகள் மற்ற கட்சிகளின் தலைவிதியை மாற்றியமைக்கும் காரணியாக மாறியுள்ளன. தற்போது கிடைத்துள்ள நம்பத்தகுந்த…

vijay ops ttv

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எடுக்கப்போகும் முடிவுகள் மற்ற கட்சிகளின் தலைவிதியை மாற்றியமைக்கும் காரணியாக மாறியுள்ளன. தற்போது கிடைத்துள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, விஜய் தனது கூட்டணியில் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடம் அளிக்க முடியாது என்பதில் மிக கறாரான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஊழல் மற்றும் பழைய அரசியல் பிம்பங்கள் இல்லாத ஒரு புதிய மாற்று அரசியலை முன்னிறுத்த விஜய் விரும்புவதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால், விஜய்யை நம்பியிருந்த ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி தரப்பினர் தற்போது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

விஜய்யின் இந்த கறார் முடிவை தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் மீண்டும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே பாஜகவுடன் பயணித்த தினகரனுக்கு, இந்த முறை 9 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாக பாஜக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள தினகரனுக்கு இது ஒரு பாதுகாப்பான முடிவாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய்யின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், பாஜகவின் நிழலில் தஞ்சமடைவதை தவிர தினகரனுக்கு வேறு வழியில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

மறுபுறம், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆச்சரியமளிக்கும் வகையில் திமுக கூட்டணியை நோக்கித் தனது பார்வையை திருப்பியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கப் போராடும் ஓ.பி.எஸ், அதிமுகவில் அல்லது என்.டி.ஏ கூட்டணியில் இணைய தீவிர முயற்சி செய்தார். ஆனால் ஈபிஎஸ் பிடிவாதமாக ஓபிஎஸ்-ஐ சேர்க்க மறுத்துவிட்டால் திமுக கூட்டணியில் இணைந்தால் தனது அரசியல் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் என கருதுகிறார். திமுக தரப்பில் அவருக்கு கட்சியில் ஒரு கௌரவமான பதவி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு 4 சட்டமன்ற தொகுதிகள் வழங்கப்படலாம் என பேசப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில், தனது கொள்கை எதிரியான திமுகவுடன் கைகோர்க்கவும் ஓ.பி.எஸ் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.

இந்த அரசியல் சதுரங்க வேட்டையில் தேமுதிகவின் நிலைதான் தற்போது ‘திரிசங்கு’ நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய்யுடன் கூட்டணி அமைக்க தகுந்த சமிக்ஞைகளை தேமுதிக தரப்பு வெளிப்படுத்தியும், அங்கிருந்து முறையான பதில் வரவில்லை. அதே சமயம் அதிமுக கூட்டணியில் இணைவதா? வேண்டாமா? என்ற குழப்பமும் அக்கட்சிக்குள் நீடிக்கிறது. திமுக பக்கத்தில் இருந்தும் சாதகமான பதில் இன்னும் வரவில்லை. விஜய்யின் வரவு தேமுதிகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எந்த பக்கம் சாயலாம் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் மிகுந்த எச்சரிக்கையுடன் காய்களை நகர்த்தி வருகிறார். ஒரு வலுவான கூட்டணி அமையாவிட்டால் தேமுதிகவின் இருப்புக்கே சவால் ஏற்படும் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

தேசிய அளவில் தமிழக அரசியலை உற்று நோக்கும் காங்கிரஸ் கட்சி, தனது இறுதி முடிவை எடுப்பதற்காக காத்திருக்கிறது. திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் திருப்திகரமாக இல்லாவிட்டால், மாற்று ஏற்பாடுகள் குறித்தும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. ஒருவேளை காங்கிரஸ் தனது கூட்டணியை இறுதி செய்துவிட்டால், அதன் பிறகு தேர்தல் பிரச்சாரம் ‘தீயாக’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ராகுல் காந்தியின் வருகையும், விஜய்யின் எழுச்சியும் தமிழக அரசியலில் ஒரு புதிய துருவமுனைப்பை உருவாக்கும். காங்கிரஸ் எடுக்கும் முடிவு திமுக கூட்டணியின் பலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது. விஜய்யின் ‘யாரையும் உள்ளே விடமாட்டேன்’ என்ற கறார் பிடிவாதம், பழைய கூட்டணிகளை சிதைத்து புதிய சமன்பாடுகளை உருவாக்கியுள்ளது. தினகரனின் பாஜக பாசம், ஓ.பி.எஸ்-ஸின் திமுக நோக்கிய பயணம் மற்றும் தேமுதிகவின் குழப்பம் என அனைத்தும் தமிழக அரசியலை ஒரு சுவாரஸ்யமான கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நிலையில் இன்று தை பிறந்துவிட்டதால் இனிவரும் நாட்களில் தொகுதி பங்கீடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்போது, தமிழகத்தின் புதிய அரசியல் வரைபடம் தெளிவாக தெரியும்.