தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா, ரஜினி குறித்து முன்வைத்த கருத்துக்கள் பெரும் புயலை கிளப்பியுள்ளதாகவும் இதனால் விஜய் அவர் மீது கடுங்கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக விமர்சித்து ஆதவ் அர்ஜூனா பேசியது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கும் ரஜினிக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான நட்பு இருந்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா, ரஜினியை வம்புக்கு இழுத்தது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு விஜய் ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்தே, ஆதவ் அர்ஜுனா மீது விஜய் செம்ம கடுப்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பரபரப்பான அரசியல் சூழலை திசைதிருப்பவும், தவெகவின் செல்வாக்கை இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் அதிகரிக்கவும் நடிகை த்ரிஷா அரசியலுக்கு வரப்போவதாக ஒரு புதிய வதந்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது. த்ரிஷா விரைவில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாகவும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளன. விஜய்யுடன் பல வெற்றி படங்களில் நடித்த த்ரிஷா, நிஜ வாழ்விலும் அவருக்கு பக்கபலமாக அரசியலில் குதித்தால் அது கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என தொண்டர்கள் கருதுகின்றனர்.
த்ரிஷா அரசியலுக்கு வந்தால் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல ஒரு வலிமையான பெண் தலைவராக உருவெடுப்பாரா என்ற விவாதமும் எழுந்துள்ளது. ஜெயலலிதாவும் திரையுலகில் இருந்து வந்து அரசியலில் இரும்பு பெண்மணியாக திகழ்ந்தவர் என்பதால், அதேபோன்ற ஒரு ஆளுமையை த்ரிஷாவிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். த்ரிஷாவின் தைரியமான பேச்சுக்களும், அவரது பக்குவமான அணுகுமுறையும் அவரை ஒரு சிறந்த அரசியல் தலைவராக மாற்றும் என பலரும் நம்புகின்றனர். இருப்பினும், ஜெயலலிதா போன்ற ஒரு மாபெரும் ஆளுமையுடன் இப்போதே ஒப்பிடுவது சற்று மிகையானது என்ற கருத்தும் நிலவுகிறது.
த்ரிஷாவின் அரசியல் வருகை வெறும் உறுப்பினர் சேர்க்கையுடன் நின்றுவிடாமல், களப்பணிகளிலும் அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் த்ரிஷாவை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எதிராகவும் த்ரிஷாவின் ‘ஸ்டார் இமேஜை’ பயன்படுத்தி வாக்குகளை கவர தவெக வியூகம் வகுத்து வருவதாகத் தெரிகிறது. இது நடந்தால் தமிழக அரசியலில் இது ஒரு புதிய அதிரடி மாற்றமாக அமையும்.
குறிப்பாக, நெல்லை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்பதையே தவெக ஒரு முக்கிய இலக்காக வைத்துள்ளதாக வதந்திகள் பரவுகின்றன. நயினார் நாகேந்திரன், சமீபத்தில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்குபழிவாங்க த்ரிஷாவே அவருக்கு எதிராக களத்தில் இறங்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும், இவை அனைத்தும் தற்போது வரை அதிகாரப்பூர்வமற்ற தகவல்களாகவும், சமூக வலைதள வதந்திகளாகவுமே பார்க்கப்படுகின்றன. விஜய் அல்லது த்ரிஷா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்தவிதமான நேரடி விளக்கமும் அளிக்கப்படவில்லை. தமிழக அரசியல் களம் எப்போதுமே சினிமா நட்சத்திரங்களின் வரவை உற்று நோக்கி வருவதால், த்ரிஷாவின் இந்த அரசியல் என்ட்ரி குறித்த செய்திகள் இப்போதைக்கு அடங்குவதாக தெரியவில்லை. உண்மையில் த்ரிஷா அரசியலுக்கு வருவாரா அல்லது இது வெறும் திசைதிருப்பல் நாடகமா என்பது வரும் நாட்களில் வெளிச்சத்திற்கு வரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
