விஜய் பக்கம் காங்கிரஸ் போய்விட்டால் கதை முடிஞ்சது.. விசிகவும் போய்விடும்.. மதிமுக, கம்யூனிஸ்ட்களை வைத்து கொண்டு ஒன்னும் செய்ய முடியாது.. இந்த பக்கம் பாஜகவை வைத்து கொண்டு அதிமுகவும் திணறும்.. விஜய் பாஜக பக்கம் சென்றாலும் ஸ்வீப்.. என்ன நடக்கும்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் முடிவுகள், தமிழக தேர்தல் களத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் தனித்துப் போட்டியிடுவது அல்லது திராவிடக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுடன்…

vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் முடிவுகள், தமிழக தேர்தல் களத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் தனித்துப் போட்டியிடுவது அல்லது திராவிடக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்த விஜய், கரூரில் நடந்த ஒரு சம்பவத்திற்கு பிறகு தனது வியூகத்தை மாற்றியதாக கூறப்படுகிறது.

தேசியக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் அரசியல் செய்வது சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டதால், தற்போது பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. விஜய் எந்த கூட்டணியை தேர்ந்தெடுப்பார் என்பதே தற்போது தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

ஒருவேளை, விஜய் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டால், அது தி.மு.க. தலைமையிலான அணிக்கு மிக கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலமாக நெருக்கம் காட்டி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த கூட்டணிக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் மற்றும் வி.சி.க. ஆகியவை தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சென்றால், தி.மு.க. கூட்டணியில் மதிமுக மற்றும் கம்யூனிஸ்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கும் கட்சிகளாக இருக்கும். ஒருவேளை தே.மு.தி.க. மற்றும் பா.ம.க. போன்ற கட்சிகள் தி.மு.க.வுடன் இணைந்தாலும் கூட, அதிக வாக்கு சதவீதம் கொண்ட காங்கிரஸ், வி.சி.க. இல்லாமல், இந்த கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவது தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விஜய் தலைமையிலான த.வெ.க. – காங்கிரஸ் – வி.சி.க. கூட்டணி அமையும் பட்சத்தில், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகள் வெகுவாக குறையும் என்று கணிக்கப்படுகிறது.

விஜய் காங்கிரஸ் பக்கம் சென்றால், தமிழக தேர்தல் களம் மூன்று சம பலம் கொண்ட அணிகளாக பிரிந்து, போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். தி.மு.க. தலைமையிலான அணி,
அ.தி.மு.க. தலைமையிலான அணி மற்றும் விஜய் தலைமையிலான அணி ஆகிய மூன்றுமே ஒன்றுக்கொன்று சவாலானதாக இருக்கும்.

இந்தச் சூழ்நிலையில், பல அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, ஒன்று விஜய் தலைமையிலான கூட்டணி கணிசமான வெற்றியைப் பெறும், அல்லது எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போட்டி மிகவும் கடுமையாக இருப்பதால், கருத்துக்கணிப்பு எடுப்பவர்களே வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று கணிப்பது கடினம் என்றும் கூறப்படுகிறது.

மாறாக, விஜய் அ.தி.மு.க.வின் அணியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தால், அது தி.மு.க. கூட்டணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமையும். : விஜய் போன்ற ஒரு வலுவான மக்கள் செல்வாக்குள்ள தலைவர் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்புகள் ஸ்வீப் ஆகிவிடும் என்று ஏற்கனவே பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மறுபுறம், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால், அந்த கூட்டணிக்கு மற்ற தமிழக கட்சிகள் வருவதற்கு தயக்கம் காட்டலாம். எனவே, வெறும் பா.ஜ.க.வின் தேசிய பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற கட்சிகளின்றி தேர்தலில் வெல்வது அ.தி.மு.க.வுக்கு சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில், வரவிருக்கும் தமிழக தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எடுக்கப்போகும் முடிவை பொறுத்தே அமையும். அவர் காங்கிரஸை தேர்வு செய்தால், தி.மு.க. கூட்டணி உடைந்து, மூன்று முனை போட்டி உருவாகி, முடிவுகள் கணிக்க முடியாத அளவுக்கு மாறும். அவர் பா.ஜ.க.வை தேர்வு செய்தால், தி.மு.க. கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்து, தேர்தல் முடிவு பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்குச்சாதகமாக மாறும்.

மொத்தத்தில் விஜய்யின் முடிவு, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் வல்லுநர்கள் உறுதியாக நம்புகின்றனர்