டெல்லி, மும்பை, கொச்சின், அகமதாபாத் உள்ளிட்ட இந்திய நகரங்கள் இந்த சலுகை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வியட்நாமின் சில முக்கிய நகரங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை பயணிகள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம். பயணிகள், விமான நிறுவனத்தின் http://www.vietjetair.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், செயலியிலும் சென்று முன்பதிவு செய்யலாம். இந்த ஆண்டு முழுவதும் பயணிகள் இந்த சலுகையை பெறலாம். ஆனால், விடுமுறை மற்றும் அதிகப் பீக் சீசன் காலங்களில் இந்த சேவை கிடையாது.
ஒருமுறை சலுகை முறையில் பயணத்துக்கான கட்டணம் செலுத்தி, அதன்பின் தேதி மாற்றம் செய்யும் போது கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். டிக்கெட் ரத்து செய்தால், பயண தொகை வாலட்டில் சேர்க்கப்படும். அடுத்த பயணத்தின் போது அந்த பணத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, 11 ரூபாய் டிக்கெட்டை முன்பதிவு செய்ய பலர் போட்டி போட்டு பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.