வேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவு

வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேலூர்…

Vellore woman VAO Sharmila jailed: Decision to examine bank account

வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வேலூர் அலமேலுமங்காபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 55). இவர் தனது கணவர் வாங்கிய நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். இதுதொடர்பான விண்ணப்பத்தை வேலூர் அலமேலுமங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா (59) விசாரித்திருக்கிறார்..

தொடர்ந்து அவர் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சரஸ்வதியிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி இதுகுறித்து வேலூர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரஸ்வதியிடம் கொடுத்து, அதை ஷர்மிளாவிடம் கொடுக்க அனுப்பி வைத்துள்ளார்கள். பின்னர் ஷர்மிளா பணத்தை பெற்றபோது அவரை போலீசார் கைது செய்தார்கள்.

 

தொடர்ந்து நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்பின்னர் அவரை வேலூர் பெண்கள் தனிச்சிறையில் போலீசார் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஷர்மிளாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் அவர் மீது துறைசார்ந்த அதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.