இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி பிந்து என்பவர், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு Facebookல் நட்பு கோரிக்கை அனுப்பினார். அந்தப் பெண் அதை ஏற்றுக்கொண்ட பின், இருவரும் சில நாட்கள் பழகினர்.
பிந்துவுக்கு ஆங்கிலம் தெரியாததால், Good Morning, Good Night போன்ற சின்ன வார்த்தைகள் மட்டும் பரிமாறிக் கொண்டதாகவும், எமோஜிகள் மற்றும் வீடியோ கால்கள் மூலம் தங்களது நட்பை வளர்த்ததாகவும் தெரிய வருகிறது.
ஒரு கட்டத்தில், பிந்து தனது காதலை ப்ரொபோஸ் செய்தார், அதனை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டார். உடனடியாக, பிந்து பிலிப்பைன்ஸில் உள்ள பெண்ணின் பெற்றோரிடம் பேசினார். பெற்றோர்களும் அவர்களின் காதலை ஏற்றுக்கொண்டனர்.
இதனை அடுத்து, இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த உற்சாகமான காதல் கதையை பிலிப்பைன்ஸ் பெண் தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “ஜாதி, மதம், மொழி, தூர எல்லைகளை கடந்த உண்மையான காதல்” என பலர் அதற்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.