விஜய்யுடன் இணைகிறாரா திருமாவளவன்? தவெகவின் இளைஞர் படையும், விசிகவின் விவேகமும் இணைந்தால்… தமிழக அரசியல் வரைபடம் தலைகீழாக மாறும்! தளபதியும் சிறுத்தையும் சீறினால் தமிழக அரசியலே அதிரும்… இந்த கூட்டணி புதிய திசை நோக்கி பாய்ந்தால் அதிகாரமே சிதறும்! இளைஞர் சக்தியும், எழுச்சி அரசியலும் இணையும் புள்ளியில்… ஒரு புதிய வரலாறு எழுதப்படும்! அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனித்து விடப்பட்டதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் சீட் பேரத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், விசிக விஜய் பக்கம் வர வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.…

vijay thiruma

தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனித்து விடப்பட்டதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் சீட் பேரத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால், விசிக விஜய் பக்கம் வர வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் மிகவும் தெளிவாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததே திருமாவளவனை யோசிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

திருமாவளவன் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வலதுசாரி சித்தாந்தங்களை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், தற்போது விஜய்யும் அதே பாதையில் செல்வதால் இருவரும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் ஒருவேளை இணைந்தால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதில் திருமாவளவனின் பங்கு ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் அரசியல் பயணம் தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருந்தாலும், அவர் திருமாவளவன் போன்ற தலைவர்களுடன் கைகோர்ப்பது ஒருவேளை நிகழ்ந்தால், அது தமிழகத்தின் வாக்கு சதவிகிதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும் விசிக, தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் தொகுதிகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது. நேத்து அந்த தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் 10 தொகுதிகள் தர இருப்பதாக கூறப்படும் நிலையில், பல ஆண்டுகாலம் கூட்டணியில் இருக்கும் தனக்கு வெறும் 6 தொகுதிகள் தானா? என்ற அதிருப்தி திருமாவளவனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது தனித்து நிற்பதா அல்லது கூட்டணி அமைப்பதா என்ற ஊசலாட்டத்தில் இருக்கும்போது, திருமாவளவன் போன்ற ஒரு முதிர்ச்சியடைந்த தலைவரின் துணை அவருக்கு தேவைப்படும். ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறினால், அவர்கள் விஜய்யுடன் சேர்ந்து ஒரு புதிய முற்போக்கு கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளது. இந்த கூட்டணி அமைந்தால், தமிழகத்தில் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறும், மேலும் திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தும்.

திருமாவளவன் பாதை மாறினால் திமுக தனது கட்சியை உடைத்துவிடும் என்ற அச்சத்தில் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தனது தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சி.பி.சண்முகம் போன்றவர்கள் சுட்டிக்காட்டுவது போல, நேற்றைய கட்சிக்கு அதிக முக்கியத்துவம் தந்து, தங்களை போன்ற நீண்டகால கூட்டாளிகளைப் புறக்கணிப்பதை விசிக தொண்டர்கள் ரசிக்கவில்லை. இந்த அதிருப்திதான் விஜய்யின் பக்கமாக திருமாவளவனை திரும்பி பார்க்க வைக்கிறது. “நண்பர் விஜய்” என்று அவர் விளிப்பதும், அவருடன் அரசியல் பேசுவதும் ஒரு புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகவே அரசியல் களத்தில் பார்க்கப்படுகிறது. விசிக விஜய்யுடன் சென்றால் மதிமுக மற்றும் இடது, வலது கம்யூனிஸ்ட்களும் கூடவே கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

மறுபும், விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ந்து சிறுபான்மை வாக்குகள் மற்றும் தலித் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இடதுசாரிகளும் இந்த புதிய கூட்டணியில் இணைந்தால், அது திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய அளவிற்கு வலுப்பெறும். குறிப்பாக, விஜய் தனது செல்வாக்கை கிராமப்புறங்களில் நிலைநிறுத்த முயற்சிக்கும் வேளையில், திருமாவளவனின் களப்பணி அவருக்கு பெரும் பலமாக இருக்கும். இந்த இரு துருவங்களின் இணைவு என்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் ஒரு நீண்டகால அதிகார மாற்றத்திற்கான விதையாகவும் அமையலாம்.

மொத்தத்தில் தமிழக அரசியல் களம் தற்போது ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விஜய்யின் வேகமும், திருமாவளவனின் விவேகமும், கம்யூனிஸ்ட்களின் கொள்கை பிடிப்பும், வைகோவின் ஆவேசமான பிரச்சாரமும் இணைந்தால் அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக இருக்கும். இந்த மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போதைய சூழலில் திருமாவளவன் மற்றும் விஜய் இணைந்து எடுக்கும் முடிவு இருவரது அரசியல் எதிர்காலத்தையும், தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் போக்கையும் தீர்மானிக்கும். இந்த இரு தலைவர்களின் நகர்வுகளும் வரும் தேர்தல்களில் ஒரு புதிய வரலாற்றை படைக்கக்கூடும் என்பதுதான் தற்போதைய அரசியல் கணிப்பு.