வர்மா உனக்கு வரம் கிடைக்க இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு! அதுவும் எப்படி பாருங்க!

By Keerthana

Published:

சினிமாவில் இங்கு யார் எவ்வளவு பெரிய ஆளாக வருவார்கள் என்பதை யாரும் கவனிக்க முடியாது. அன்று விஷாலின் திமிரு படத்தில் லொடுக்குவாக வந்த விநாயகம் தான் இன்று வர்மாவாக ஜெயிலரில் வந்திருக்கிறார்.

இந்த விநாயகம் யார் என்று பார்த்தால் கடந்த 1995ம் ஆண்டுமுதல் சினிமாவில் இருப்பவர். ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் மலையாளத்தில் மட்டுமே கிடைத்தது. தமிழில் திமிரு படத்தில் லொடுக்கு என்ற ரோலில் நொண்டி நொண்டி நடக்கும் வில்லன் நடிகராக நடித்திருப்பார்.

’ஜெயிலர்’ கதையில் 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?

இவர் தன்னுடைய வாழ்க்கையில் சினிமாவில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. ஒரு டான்சராக வாழ்க்கையை தொடங்கியவர் படிப்படியாக நடிகராக மாறினார். இவர் சிறந்த பாடகரும் கூட. இவர் முதல்முதல் மான்திகாரம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு மலையாளத்தில் பல படத்தில் நடித்தார். தமிழில் 2006ல் தான் திமிரு படத்தில் நடித்தார். உண்மையில் அவருடைய கேரக்டரில் அப்படியே வாழ்ந்திருப்பார். அதன்பிறகு சிலம்பாட்டம் படத்தில் நடித்திருப்பார். எல்லாம் அவன் செயல், காளை, சிறுத்தை, மரியான், படத்தில் நடித்தார். 2013க்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகளே வரவில்லை. சரியாக 2023ல் இப்போது ஜெயிலரில் வில்லனாக கலக்கி உள்ளார்.

இவரை பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும். விநாயகம் ஜெயிலரில் வர்மாகவே வாழ்ந்திருப்பார். மலையாளம் கலந்த தமிழ் பேசும் வில்லனாக நடித்திருக்கும் விநாயகம் வர்மா கேரக்டரில் பார்க்கவே பயங்கரமாக இருப்பார். ரஜினிக்கு நிகராக இவரது கேரக்டர் உருவாக்கப்படிருக்காது என்றாலும் ரஜினியுடனான இவரது காட்சிகள் உண்மையில் மிரள வைக்கும்.

200 நாட்களுக்கு மேல் திரையில் கொடிகட்டி பறந்த ரஜினியின் 8 மாஸான திரைப்படங்கள் ஒரு பார்வை!

கிடைக்கும் சின்ன சின்ன இடங்களில் பெரிய அளவில் முகபாவணைகளை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருப்பார். உண்மையில் வர்மாவிற்கு வரம் கிடைக்க பல வருடம் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன். உண்மையில் காத்திருப்புக்கு தரமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் சேதுபதி, விநாயகத்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போய் உள்ளார். அவரை போனில் அழைத்து பாராட்டி உள்ளாராம். விரைவில் விநாயகத்தை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க வாய்ப்பு உள்ளது.