உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் சிறுவயது முதல் கிருஷ்ண பக்தையாக இருந்த நிலையில் தற்போது அவர் கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷிகா என்ற பெண் சிறுவயதிலிருந்து கிருஷ்ண பக்தையாக இருந்து வந்தார் என்பதும் அவர் தினந்தோறும் கிருஷ்ணரை வழிபட்டு கிருஷ்ணன் குறித்த பாடல்களை பாடி வந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை கிருஷ்ணரை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதற்கு முந்தைய நாள் மெஹந்தி, ஹால்டி போன்ற திருமணத்திற்கு முந்தைய சடங்குகளும் நடந்தது.
இது குறித்து அரசியல் ஹர்ஷிகா தந்தை கூறிய போது ’கடவுள் கிருஷ்ணன் இனிமேல் என்னுடைய மருமகன், அவர் என்னுடைய வீட்டில் தான் எப்போதும் இருப்பார்’ என்று கூறியுள்ளார். திருமணத்துக்கு முந்தைய நாள் கிருஷ்ணனுக்காக விரதம் இருந்தால் மணப்பெண் ஹர்ஷிகா திருமண தினத்தில் கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிந்து திருமணம் செய்து கொண்டார்.
இதனை அடுத்து கிருஷ்ணன் உடன் ஹர்ஷிகாவை அவருடைய உறவினர் வீட்டிற்கு அனுப்பி பெற்றோர் அனுப்பி வைத்தனர். கிருஷ்ணர் – ஹர்ஷிகா திருமணம் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பழங்காலங்களில் கிருஷ்ணரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக பழங்கதைகள் இருக்கும் நிலையில் தற்போது உண்மையாகவே ஒரு இளம்பெண் கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.