நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போக்சோ சட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண்களுக்கென தனியாகப் பேருந்துகள், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் சட்டங்கள் என அனைத்து வகைகளிலும் பெண்களுக்குத் துணை நிற்கிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது.
மாடலிங் துறை, சினிமா துறை போன்ற இடங்களில் வெளியே தெரியாமல் சில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது. அண்மையில் கூட கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை நாடெங்கிலும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்யும் வகையில் மகளிர் ஆணையம் ஒரு அதிரடி முன்மொழிவினை மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
3 மாதங்களுக்கு ரூ.2,222 மட்டுமே. ஜியோவின் சூப்பர் சலுகை.. இன்டர்நெட், 800 சேனல்கள் இலவசம்..
உத்திரப்பிரதேச மாநிலத்தின் மகளிர் ஆணையம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் களையும் நோக்கில் சில இடங்களில் ஆண்களைத் தடை செய்யுமாறு அந்த முன்மொழிவில் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி உடற்பயிற்சிக் கூடங்களில் ஆண் பயிற்சியாளர்கள் பெண்களுக்கு பயிற்றுவிக்கக் கூடாது என்றும், தையலகங்களில் உடைகளின் அளவு எடுப்பதற்கு கண்டிப்பாக ஆண்களை அனுமதிக்கக் கூடாது எனவும், யோகா பயிற்சியின் போதும் பெண்களே பயிற்றுவிக்க வேண்டும் என உத்தரப்பிரசேத மாநில மகளிர் ஆணையம் முன்மொழிவு செய்துள்ளது.
இந்த அறிக்கை தற்போது அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாநில அரசு இதிலுள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. பெரும்பாலும் தற்போது டிரைவிங் ஸ்கூல், நீச்சல் குளம் எனப் பல இடங்களில் பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்களே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.