சப்பாத்தி சுடும்.. வீடியோ கூட போன்ல பாக்கும்.. 8 ஆண்டுகளில் மனிதனாகவே மாறிய குரங்கின் வியப்பான பின்னணி..

குரங்கில் இருந்தே மனிதன் தோன்றியதாக பல ஆண்டுகளுக்கு முன்பு சில ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்து வருவதை நாம் அதிகம் கவனித்திருப்போம். பள்ளிக்கூட பாடங்களில் கூட குரங்கிலிருந்து மனிதன் எப்படி உருவானார் என்பது பற்றி வரலாற்று…

Monkey as Human

குரங்கில் இருந்தே மனிதன் தோன்றியதாக பல ஆண்டுகளுக்கு முன்பு சில ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்து வருவதை நாம் அதிகம் கவனித்திருப்போம். பள்ளிக்கூட பாடங்களில் கூட குரங்கிலிருந்து மனிதன் எப்படி உருவானார் என்பது பற்றி வரலாற்று பக்கங்களில் இருப்பதையும் நாம் அறிந்திருப்போம். ஒரு சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இன்று நாம் வெளியே எங்கேயாவது செல்லும் போது அங்கே இருக்கும் குரங்குகளை பார்த்தால் அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களும் ஏறக்குறைய மனிதர்களுக்கு நிகராக இருக்கும்..

அப்படி ஒரு சூழ்நிலையில் மனிதர்களுடனே 8 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஒரு குரங்கை பற்றியும் அது செய்து வரும் விஷயங்கள் பற்றியும் தற்போது பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலம் ரேபரலி என்னும் பகுதிக்கு அடுத்த சத்துவா கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் தான் விவசாயி விஸ்வநாத். இவரது குடும்பத்தினர்கள் தான் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு குரங்கை அந்த வீட்டில் இருக்கும் ஒரு நபரை கவனித்து வருகின்றனர்.

பாத்திரம் கழுவும், தூங்கும்..

எட்டு வருடத்திற்கு முன்பாக இந்த பகுதியில் ஒரு குரங்கு கூட்டம் வந்த போது இந்த ஒரே ஒரு குரங்கு மட்டும் அவர்களிடம் இருந்து பிரிந்து தனியாக தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த குரங்கிற்கு விஸ்வநாதன் குடும்பத்தினர் அனைவரும் உதவி செய்ய அதன் பின்னர் வந்த குரங்குக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு பந்தமும் உருவாகி விட்டதாக தெரிகிறது.
Rani Monkey

குரங்கு ஒரு காட்டில் இருந்து வந்த விலங்கு என்பதை மறந்து போன சூழலில், ராணி என்ற பெயரில் அந்த பகுதியில் விஸ்வநாதன் குடும்பத்தில் இருக்கும் ஒருவராக வலம் வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அந்த வீட்டில் பாத்திரங்கள் கழுவுவது, ரொட்டி சுடுவது மனிதர்களைப் போல உண்டு உறங்குவது என அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறது ராணி.

மனுஷனாவே மாறிடுச்சு..

இவை அனைத்தையும் தாண்டி விவசாயி விஸ்வநாத்தின் மகனான ஆகாஷுடன் நெருங்கிய பந்தத்தில் இருக்கும் ராணி குரங்கு, மொபைல் போனில் வீடியோக்களை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குரங்கிடமிருந்து பிரிந்து வந்ததால் சற்று வருத்தத்தில் இருந்த ராணி பின்னர் ஆகாஷ் உள்ளிட்டோரின் பழக்க வழக்கத்தின் காரணமாக அதை மறந்து மிக மகிழ்ச்சியாகவும் வலம் வருகிறது.

அந்த கிராம பகுதியில் ராணி மிக பிரபலமாக இருக்கும் வேளையில் இது தொடர்பான வீடியோக்களையும் ஆகாஷ் தனது யூடியூப் சேனல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். எட்டு ஆண்டுகளாக மனிதர்களுடன் வாழ தொடங்கி மனிதர்களாகவே மாறிவிட்ட குரங்கை பலரும் வியந்து தான் பார்த்து வருகின்றனர்.