ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடியா வைக்குற? ஈரானின் 16 போர்க்கப்பல்களை 16 நிமிஷத்தில் அழித்த அமெரிக்கா.. சும்மா பயமுறுத்துறேன்னு நினைச்சியா? ஹார்முஸ் நீரிணை உலகத்தோட ரத்த நாளம்… அங்க கண்ணிவெடி வைக்க நினைச்சா, உன் கடற்படையே காணாம போகும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. நீ 16 கப்பல்களை அழிச்சா நான் என்ன சும்மா இருப்பேனா? அபுதாபியின் அமெரிக்க விமான தளத்தின் மீது ஏவுகணை வீச்சு.. இப்போதைக்கு போர் முடியாது போல தெரியுது..!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடிகளை இட முயன்ற ஈரானின் 16 போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் முழுமையாக அழித்துள்ளன. ஈரான் இந்த முக்கிய கடல்வழி பாதையில்…

iran ships

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடிகளை இட முயன்ற ஈரானின் 16 போர்க்கப்பல்களை அமெரிக்க படைகள் முழுமையாக அழித்துள்ளன. ஈரான் இந்த முக்கிய கடல்வழி பாதையில் இடையூறு விளைவித்தால், அந்த நாடு இதுவரை கண்டிராத அளவிலான தாக்குதலை சந்திக்க நேரிடும் என்று வெள்ளை மாளிகை ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 10 அன்று ஹார்முஸ் நீரிணைக்கு அருகே கண்ணிவெடி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானிய கடற்படை கப்பல்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தாக்குதல் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹார்முஸ் நீரிணை என்பது பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவிற்கு இடையிலான ஒரே கடல்வழி பாதையாகும், இது உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு மிக முக்கியமான ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இந்த பாதையைத் திறந்தே வைத்திருப்பதற்கு தான் இராணுவ சக்தியை பயன்படுத்தத் தயங்க போவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் முன்னரே தெரிவித்திருந்தார். வார இறுதியில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி உயர்வை தொடர்ந்து, தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நீரிணை வழியாக செல்லும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என்பதில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மிக உறுதியாக இருப்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.

மறுபுறம், ஈரானும் தனது ஆக்ரோஷமான நிலைப்பாட்டை தளர்த்தி கொள்ளவில்லை. ‘நாங்கள் போர்நிறுத்தத்தை விரும்பவில்லை’ என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் வெளிப்படையாக அறிவித்துள்ளார், இது போர் மேலும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துகிறது. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், ஈரான் இதுவரை கண்டிராத தீவிரமான தாக்குதலை சந்திக்கும் என்று எச்சரித்த சில மணிநேரங்களிலேயே, ஈரானின் புரட்சிகர காவல்படை பதிலடி கொடுக்க தொடங்கியது. அபுதாபிக்கு அருகிலுள்ள அல்-தாப்ரா விமான தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள ஜுபைர் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. நேற்று இரவு துபாய் மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்களில் சைரன் ஒலிகள் கேட்டது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் கடற்படையும் இந்த பதற்றமான சூழலில் தனது பங்களிப்பை தொடங்கியுள்ளது. போர்ட்ஸ்மவுத் துறைமுகத்திலிருந்து எச்.எம்.எஸ் டிராகன் என்ற போர்க்கப்பல் மத்திய தரைக்கடல் பகுதியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தனது நட்பு நாடுகளுக்கு ஆதரவாகவும் பிரிட்டன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சர்வதேச கடல்வழி பாதைகளில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்ட நேட்டோ நாடுகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

ஈரானின் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் பதிலடி தாக்குதல்கள் என இரு நாடுகளும் பின்வாங்காத நிலையில், இது ஒரு முழு அளவிலான போராக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அமெரிக்கா தனது தொழில்நுட்ப ரீதியிலான வான்வழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், ஈரான் தனது ஏவுகணை வலிமையை பயன்படுத்தி அமெரிக்க தளங்களைக் குறிவைத்து வருகிறது. சர்வதேச நாடுகள் அமைதிக்கு அழைப்பு விடுத்தாலும், களத்தில் உள்ள சூழல் அதற்கு மாறாகவே உள்ளது. ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு என்பது உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளதால், வரும் நாட்களில் இந்தப் பகுதியில் நிலவும் பதற்றம் உலக அரசியலில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.