ஒரு X பயனர், “@UPI_NPCI செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால், முதல் முறையாக UPI சேவை முடங்கியுள்ளது,” என்று பதிவு செய்துள்ளார். மற்றொருவர், “என் பணம் பிடிக்கப்பட்டுவிட்டது, ஆனால் நண்பரின் கணக்கிற்கு சேரவில்லை,” எனப் புகார் தெரிவித்துள்ளார்.
2024 ஜனவரியில் UPI பரிவர்த்தனைகள் 16.99 பில்லியனைத் தாண்டியுள்ளன. மொத்த மதிப்பு ₹23.48 லட்சம் கோடியை கடந்துள்ளது. FY 2024-25ல் P2M பரிவர்த்தனைகள் 62.35% மற்றும் P2P பரிவர்த்தனைகள் 37.65% ஆக இருந்துள்ளன.
நாட்டின் மொத்த சில்லறை பணப்பரிவர்த்தனைகளில் 80% UPI மூலம் நடைபெறுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் திடீரென UPI செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது நாடு முழுவதும் அதன் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொழில்நுட்ப கோளாறா? அல்லது ஹேக்கர்களின் கைவரிசையா? என விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்.