ரஷ்யாவின் இணையதளங்களை முடக்கும் உக்ரைன் ஹேக்கர்கள்.. அதுவும் இத்தனை லட்சம் ஹேக்கர்களா?

By Gayathri A

Published:

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போரானது உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயமாக உள்ளது. ரஷ்யா உக்ரைனை கடந்த சில நாட்களாக வான் வழி, தரை வழி மற்றும் நீர் வழி என மூன்று வழிகளிலும் போரைத் துவக்கி கடுமையாகத் தாக்க உலகின் பல நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்தநிலையில் உக்ரைன்  ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை முடக்க ஹேக்கர்களை ரெடி செய்துள்ளது.

அதாவது உக்ரைன் நாட்டினைச் சார்ந்த 3,00,000 கணினிப் பொறியாளர்கள் ரஷ்யாவின் முக்கியமான அதிகாரப்பூர்வ இணையதளங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

ரஷ்யாவின் அரசு இணையதளப் பக்கங்களில் துவங்கி, ரஷ்யாவின் ஊடகங்கள், ரஷ்ய நிறுவனங்கள் என அனைத்தினையும் முடக்க எண்ணி சைபர் முறையில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்த பணிகள் ஒருபுறம் நடைபெற்றுவர ரஷ்யா தரப்பில் வெளியான செய்தியில் சைபர் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்று உறுதிப்படுத்தி உள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிராக சைபர் தாக்குதலை கையில் எடுத்த உக்ரைனைக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவினைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment