இன்று நடைபெறுவதாக இருந்த நீட் யுஜி கலந்தாய்வு திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

By Bala Siva

Published:

இளங்கலை நீட் கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் அந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு நீட் என்ற தேசிய தகுதி தேர்வு கடந்த சில வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உட்பட பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் இன்று நடைபெறவாக இருந்த நீட் இளங்கலை நுழைவுத் தேர்வுக்கான கலந்தாய்வு மறு தேதி அறிவிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஜூலை 6ஆம் தேதி அதாவது இன்று இந்தியா முழுவதும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்த நிலையில் கலந்தாய்வு நடத்த உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

மேலும் நீட் சம்பந்தப்பட்ட அனைத்து மனுக்களும் ஜூலை 8ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்னர் கலந்தாய்வு தேதி முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்று இந்த வழக்கை பதிவு செய்தவர்கள் கூறிவரும் நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் கலந்தாய்வு குறித்த தகவல்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பார்வையிட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.