மங்கோலியர் ராலி என்ற சர்வதேச ராலியில் கலந்து கொண்ட இந்த மூன்று பெண்கள் குழு, லண்டனிலிருந்து மங்கோலியா வரை பத்தாயிரம் மைல்கள் பயணிக்க வேண்டும் என்றுதான் முதலில் இலக்காக இருந்தது. 2023ஆம் ஆண்டு இந்த ராலி தொடங்கிய நிலையில், அதன் பின்னர் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களுக்கும் இந்த பயணம் விரிவடைந்தது.
அனுபா வர்மா, மணிஷா மிஸ்ரா மற்றும் பூஜா ஷர்மா ஆகிய மூவரும் இந்த பணியில் ஈடுபட்டனர். மனதளவில், 33 நாடுகளுக்குச் செல்லும் பயணத்திற்கு தயாராகி, தெற்கு ஐரோப்பாவுக்குள் சென்று போர்ச்சுகல் முதல் ஜார்ஜியா, நார்வே, இத்தாலி வரை எல்லைகளை கடந்துள்ளனர். ஒவ்வொரு பயணத்திலும் புதுவிதமான அனுபவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் அவர்கள் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு குறித்து அவர்கள் கூறியதாவது: “எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு குறைபாடாக உணரவில்லை. ஆனால் சில நேரங்களில் திட்டமிட்ட இடங்களை அடைய முடியாமல் போனது. சில ஹோட்டல்களில் செக்இன் செய்ய முடியாததால், காருக்குள் தூங்க நேர்ந்தது.”
இந்த பயணத்தை தொடங்கும் முன்பே, பல மாதங்கள் திட்டமிட்டு, வழித்தடங்களை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து மாற்றியமைத்தனர். அந்தந்த நாடுகளில் தங்குவதற்கான முன்பதிவுகளை செய்து, அனைத்து ஆவணங்களையும் பலமுறை சரிபார்த்து, தேவையான அனுமதிகளை பெற்று அவர்கள் பயணத்தை தொடங்கினர்.
தற்போது, ஒரு சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த மூன்று பெண்கள், உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.