மதுரையில் தலைமை செயலக கிளை.. ஆளுனர் பதவி அகற்றம்.. தமிழ் ஆட்சி மொழி.. தவெக செயல்திட்டம்..!

By Bala Siva

Published:

 

மதுரையில் தலைமைச் செயலக கிளை தொடங்கப்படும், ஆளுநர் பதவியை அகற்றப்படும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்பது உள்பட பல புரட்சிகரமான தமிழக வெற்றி கழகத்தின் செயல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விபரம் இதோ:

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் செயல் திட்டம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த அறிவிப்புகள் இதோ:

வர்ணாசிரம வழக்கங்களுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்

தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற நிலை உறுதி செய்யப்படும்

தலைமை செயலக கிளை மதுரையில் அமைக்கப்படும்

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் தரப்படும்

மாநில அரசின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்

லஞ்ச, லாவன்யம், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி அளிக்கிறோம்

தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும்

ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் நீர்நிலைகள் மீட்கப்படும்

ஆவினில் கருப்பட்டி பால் வழங்கப்படும்

பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்

அரசு ஊழியர்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும்

காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்

தகவல் தொழில்நுட்ப துறைக்கு தனி பல்கலை. உருவாக்கப்படும்

பெண்களுக்கு சட்டமன்றம், கட்சி பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே தவெகவின் கோட்பாடு

மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை

மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே

எல்லா நிலைகளிலும் ஆண்,பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்

மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை

தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை

தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும்

Tags: conference, TVK, vijay