தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் அடித்து ஏராளமான ரசிகர்களை சேர்த்தவர் நடிகர் விஜய். இவர் 1999ம் வருடம் இலங்கை தமிழரான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
. சங்கீதாவின் தந்தை லண்டனில் தொழிலதிபராக இருப்பவர்.
விஜய் – சங்கீதா தம்பதிகு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். விஜயை திருமணம் செய்து கொண்ட பின் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளிலும் சங்கீதா கலந்து கொண்டார். ஆனால் கடந்த பல வருடங்களாகவே விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனியாக வசிப்பதாகவும், அவரின் மனைவி சங்கீதா மற்றும் அவனின் மகன், மகள் இருவருமே லண்டனில் வசிப்பதாக செய்திகள் வெளியானது..
ஆனால் அதைப் பற்றிய ஒரு தெளிவான பதில் யாரிடமும் இல்லை. இந்நிலையில்தான் விஜயின் மனைவி சங்கீதா சென்னை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வருகிற ஏப்ரல் 20ம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதன் மூலம் இருவரும் பல வருடங்களாக பிரிந்து வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
