இன்று நவ.14 குழந்தைகள் தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை ஒவ்வொர் ஆண்டும் தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அதன்படி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் குழந்தைகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்தினை எக்ஸ்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை விலை மதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழி வாங்குதல், ஏமாற்றுதல், போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல் தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது.
நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தினை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம். குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம். இனிய குழந்தைகள் தின நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.
விஜய்க்கு பல்வேறு குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவரது நடனத்தினை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்.
ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முக்கிய விழிப்புணர்வு பதிவு.. அட இதுதானா விஷயம்..!
நடிகராக இருந்த போது ரசிகர்களுக்கு மட்டும் வாழ்த்துச் செய்திகளைக் கூறி வந்த விஜய் தற்போது அரசியல் கட்சியைத் துவக்கி அதன் தலைவராகி விட்டதால் அனைத்து முக்கிய தினங்களுக்கும், தலைவர்களுக்கும், முக்கிய நிகழ்வுகளுக்கும் வாழ்த்துச் செய்தி, அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். மேலும் அண்மையில் சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்காதது விவாவத்தை ஏற்படுத்தியது.