விஜய்க்கு எப்போதுமே 1வது இடம் தான் இலக்கு. அவர் இரண்டாவது இடத்தில், மூன்றாவது இடத்தில், நான்காவது இடத்தில் உள்ளவர்களை போட்டியாகவே பார்க்க மாட்டார் என்றும், சினிமாவில் எப்படி அவர் கடுமையாக உழைத்து 1வது இடத்தை பெற்றாரோ, அதேபோல் அரசியலிலும் அவர் 1வது இடத்தை இலக்காக வைத்துள்ளார் என்றும், முதல் தேர்தலிலேயே அவர் 1வது இடத்தை பிடிப்பார் என TVK காமேஷ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“திமுக, அதிமுகவுக்கு ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே ஒரு கோடி உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இருந்த நிலையில், தற்போது ஒன்றரை கோடியை தாண்டி விட்டது,” என்றும் TVK காமேஷ் தெரிவித்தார். அதிமுக, திமுகவுக்கு நிகராக தமிழக வெற்றி கழகத்திற்கும் தொண்டர்களின் எண்ணிக்கை இருக்கிறது என்றும், எனவே விஜய்யை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 1வது இடத்தில் யார் இருக்கிறார்களோ, அந்த இடத்தில் உள்ளவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் கண்டிப்பாக முதல் இடத்தை பிடிப்பார் என்றும், இரண்டாவது இடத்தில், மூன்றாவது இடத்தில், நான்காவது இடத்தில் உள்ளவர்களை அவர் போட்டியாகவே கருதவில்லை என்றும், விஜய்க்கு எப்போதுமே ஒன்றாவது இடம்தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்யுடன் கண்டிப்பாக கூட்டணி சேர கடைசி நேரத்தில் பல அரசியல் கட்சிகள் வரும் என்றும், காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, வி.சி.க. உள்ளிட்ட பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும், விஜய் தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மொத்தத்தில் விஜய் இந்த தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவார் என்றும், திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்ற நிலை உருவாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Vijay’s Goal is Always Number One in Politics, Says TVK Kamesh
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
