ஏற்கனவே பல்வேறு வகையிலான திட்டமிட்டிருந்தாலும், சில இடங்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து ஸ்தம்பித்தது உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், சென்னையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் மாற்று பாதைகள் மூலம் இயக்கப்படுவதாகவும் தகவல் உள்ளது.
இந்த நிலையில், மாநாட்டு பந்தலுக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கை நேரம் ஆக ஆக அதிகரித்து வரும் நிலையில், நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
முதலில் மாநாடு 2 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் தொடங்கும் என்றும், 4 மணிக்கு கட்சி பிரபலங்கள் பேசுவார்கள் என்றும், 6 மணிக்கு விஜய் பேசுவார் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரம் முன்னதாகவே மாநாடு தொடங்க இருப்பதாகவும், பகல் 1 மணிக்கே கலை நிகழ்ச்சிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
எனவே, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டாம் என்பதற்காகவே விஜய் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாநாட்டு திடலுக்கு வந்த தொண்டர்களுக்கு அனைத்து வசதிகளையும் சரியாக செய்து கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக தண்ணீர் பாட்டில்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.