விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாடு இன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்கூட்டியே மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டு, மாநாட்டின் ஒவ்வொரு பகுதியையும் எப்படி நடத்த வேண்டும் என்று ஆலோசித்து, மிகக் கச்சிதமாக மாநாடு நடந்து வருவதாகவும், மாநாட்டின் சில விதிமுறைகளை தொண்டர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டு திடலில் சில பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதற்காக பேனர்களும் மாநாட்டை சுற்றிய பல பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ளன. மாநாட்டு திடலுக்குள் செல்பி ஸ்டிக், மது, வீடியோ கேமரா, போட்டோ கேமரா ஆகியவற்றை எடுத்து வரக்கூடாது என்றும், மேலும் குறிப்பாக பதாகைகள், செல்லப்பிராணிகள், மற்றும் எந்தவிதமான ஆயுதங்களையும் எடுத்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, பிற கட்சிகளின் கொடிகள், பதாகைகள் உள்ளிட்ட பொருட்களை கண்டிப்பாக கொண்டு வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 18 விதமான பொருட்களை மாநாட்டு திடலுக்குள் கொண்டு வரக்கூடாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதை கடைபிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.