தவெகவில் விசிக.. 40 தொகுதிகள் + துணை முதல்வர்.. பேரம் பேச வாய்ப்பில்லை.. ஸ்டாலின் ஷாக்.. ஆவின் வைத்தியநாதன்..!

எனக்கு கிடைத்த தகவலின்படி, தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைய முடிவு செய்துவிட்டது என்றும், இரு கட்சிகளின் பிரபலங்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாகவும், 40 தொகுதிகள் மற்றும் துணை…

vijay rahul thiruma

எனக்கு கிடைத்த தகவலின்படி, தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைய முடிவு செய்துவிட்டது என்றும், இரு கட்சிகளின் பிரபலங்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாகவும், 40 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தருவதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும் அ.தி.மு.க. பிரமுகர் ஆவின் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடர முடியாது என்றும், ஏனெனில் இந்த தேர்தலிலும் அந்த கட்சிக்கு ஆறு தொகுதிகள் மட்டுமே கொடுக்க தி.மு.க. முடிவு செய்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்கு அழைக்க மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் திருமாவளவனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, எந்த நேரத்திலும் அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை திருமாவளவன் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால், அந்த கூட்டணிக்கு சென்று விடுவேன் என்று பயமுறுத்தி தி.மு.க. கூட்டணியிடம் அதிக தொகுதிகள் பெறலாம் என்ற வாய்ப்பும் இல்லை என்பதால், அவருக்கு இருக்கும் ஒரே ஆப்சன் தமிழக வெற்றி கழகம் தான் என்றும் ஆவின் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். “என்னுடைய கணக்கு சரியாக இருக்குமானால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும், 40 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி தர விஜய் ஒப்புக்கொண்டதாகவும்” ஆவின் வைத்தியநாதன் தெரிவித்தார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த கூட்டணியில் இணைய முடிவு செய்துவிட்டதாக வரும் தகவல் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தான். மற்ற கட்சிகளுக்கெல்லாம் பெரிய அளவில் வாக்கு சதவீதம் இல்லாத நிலையில், கண்டிப்பாக தி.மு.க. கூட்டணியால் இந்த இரண்டு கட்சிகள் இல்லாமல் பெரிய அளவில் வாக்கு சேகரிக்க முடியாது, வெற்றியும் பெற முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் சேரவும் அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன என்றும், இந்த இரண்டு கட்சிகளும் பெரும் வாக்குகள் பெற்றாலும் தி.மு.க. மற்றும் விஜய் கூட்டணியை தோற்கடிக்கப் போதாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், காங்கிரஸ் மற்றும் வி.சி.க. ஆகிய இரு கட்சிகளும் தமிழக வெற்றி கழகத்துடன் இணைவது உறுதி செய்யப்பட்டால், அந்த கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.