இப்படியே போனா 2% கூட தேறாது.. வைரலாகும் தவெக ஆலோசகர் ஆடியோ..!

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இப்படியே போனால் தேர்தலில் 2% ஓட்டு கூட வாங்க முடியாது என தவெக ஆலோசகரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.…

TVK John

தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இப்படியே போனால் தேர்தலில் 2% ஓட்டு கூட வாங்க முடியாது என தவெக ஆலோசகரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2024 பிப்ரவரியில் ஆரம்பித்து சென்ற அக்டோபர் 27-ல் முதல் மாநில மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்தினார்.

அதன்பின் கட்சித் தலைவராக அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் மட்டுமே கலந்து கொண்டார். மேலும் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களுக்கு கட்சி அலுவலகத்திலிருந்தே புகைப்படங்களுக்கு மரியாதை செய்யும் போட்டோ மட்டும் வெளியிட்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் தற்போது முழுக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நாளை புதிய மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகராகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் ஜான் ஆரோக்கியசாமி இருந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே பாமக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் ஆலோசகராகச் செயல்பட்டு வந்தார். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்பதை பிரபலப்படுத்தியதே ஜான் ஆரோக்கியசாமியின் ஆலோசனைதான்.

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்.. ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவிப்பு

இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தற்போது ஜான் ஆரோக்கியசாமியின் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய்தான் முகம். அவரையே முன்னிலைப் படுத்தவேண்டும். ஆனால் கட்சித் தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தை முன்னிலைப்படுத்துகின்றனர். இவரது அனுமதி இல்லாமல் தொண்டர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். பேனர்களில் இவரது போட்டோவே ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்டாலின் இடத்தில் துரைமுருகனை வைத்தால் சும்மா விடுவார்களா? ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை வைக்க முடியுமா? எந்தக் கட்சியிலும் தலைவரோ, நிறுவனரோ யாராக இருந்தாலும், முதல்வர் வேட்பாளர் யாரோ அவர்கள்தான் அக்கட்சியின் முகம். விஜய்யே பிறந்தநாள் கொண்டாடவில்லை. நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள்? சிறு புள்ளிக்கு கூட இவர்தான் அனுமதி கொடுப்பார்.

நான் ராமதாஸையே வெளியேற்றி அன்புமணியை முன்னிலைப்படுத்தியவன். விஜய் சாரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கலைஞர், அண்ணா தலைவர்களுக்கு ஈடாக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். இது பெரிய தவறு. இப்படியே சென்றால் 2% கூடத் தேறாது. அவருடைய இடத்தினை இன்னொருவர் அபகரிக்கக் கூடாது.

எம்.ஜி.ஆர்., அண்ணா, ஜெயலலிதா, கலைஞர், ஸ்டாலின், உதயநிதி இவர்கள் தான் மையம். இவர்கள் முகங்களுக்குத் தான் ஓட்டு. அதேபோல்தான் கட்சியில் விஜய் சார் மையம். நீங்கள் யார் என்ன செய்து விட்டீர்கள். உங்களுக்கு ஏன் கிடா வெட்டுகிறார்கள். உங்களுக்காக ஏன் இரத்ததானம் கொடுக்கிறார்கள். நாங்கள் எது பேசினாலும் விஜய் அதை புஸ்ஸி ஆனந்திடம் தெரிவித்து விடுகிறார். ” இவ்வாறு அந்த ஆடியோவில் ஜான் ஆரோக்கியசாமி பரபரப்பாக புஸ்ஸி ஆனந்தை விமர்ச்சித்திருக்கிறார். இந்த ஆடியோ தற்போது தவெக-வினிரிடையே வைரலாகி வருகிறது.