பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் திருப்பதி கோயிலில் பக்தர்களை பயமுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார் என்பதும் அதன் பின்னரும் சில வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் பக்தர்கள் அச்சப்படும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்ததை எடுத்து திருப்பதி தேவஸ்தானம் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பது கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நண்பர்களுடன் சென்ற யூடியூபர் டிடிஎப் வாசன், அங்கு காத்திருந்த பக்தர்களிடம் பயமுறுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்துள்ளார். அதாவது சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பது போல் அவர் ரிலீஸ் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இதனால் உண்மையிலேயே கதவு திறக்க போகிறது என்று எண்ணி பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டதாகவும், இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அதன் பிறகு தான் பிராங்க் வீடியோ என்று தெரியவந்தது.
இது குறித்து பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீசில் புகார் அளிக்க, திருப்பதி தேவஸ்தானம் டிடிஎப் வாசன் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களை பயமுறுத்தும் வகையில் வீடியோ எடுப்பது சட்டப்படி தவறு என்றும் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.