அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இதன் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் டிரம்ப் என்பதால் இந்தியாவில் உள்ள வலதுசாரிகளுக்கு அவரது வெற்றி நிச்சயம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்க உறவில் மேம்பாடு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியாக இருந்தாலும், அவர் துணை அதிபராக இருந்த காலத்தில் இந்திய-அமெரிக்க உறவு விரைவில் பெரிய அளவில் மேம்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் அவர் துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, டிரம்ப் காலத்தில் நிச்சயம் இந்திய-அமெரிக்க உறவு வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், ஹார்லி டேவிட்சன் பைக் அமெரிக்காவில் உற்பத்தி ஆகும் நிலையில், இந்த பைக்கிற்கு இந்தியா அதிக வரியை விதித்தது. இதற்கு ஏற்கனவே டிரம்ப் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தார். 200 சதவீத வரி விதிப்பால் ஹார்லி டேவிட்சன் பைக் இந்தியாவில் விற்க முடியவில்லை என்றும் அதேபோல் இந்திய பொருள்களுக்கும் இங்கே வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதே நேரத்தில் இன்னொரு இந்தியாவுக்கு சாதகமான அம்சம் என்னவென்றால், நிச்சயம் சீனாவுடன் டிரம்ப் மோதல் போக்கை கடைபிடிப்பார். இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று ராஜாங்க ரீதியிலான இந்திய-அமெரிக்க உறவு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தேசியவாதம், தேசபக்தி ஆகியவற்றில் டிரம்ப் மற்றும் மோடி ஆகிய இருவரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டு இருப்பதால், இந்தியாவுக்கு கூடுதல் சாதகம் என்று கூறப்படுகிறது. “அமெரிக்க இந்துக்களை பாதுகாப்போம், அமெரிக்க இந்துக்களின் சுதந்திரத்துக்காக போராடுவோம், இந்தியாவுடனும், எனது நண்பர் பிரதமர் மோடியுடனும் சிறந்த கூட்டணியை வலுப்படுத்துவோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எனவே, இந்தியாவுக்கு ஒரு சில பாதங்களில் பாதகத்தில் இருந்தாலும், பல சாதகங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், H1B விசா முறையில் டிரம்ப் மாற்றம் கொண்டுவர முயற்சிப்பார் என்றும் இதனால் இந்தியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து, இந்தியாவின் சாதகங்கள் அதிகரிக்குமா, பாதகங்கள் அதிகரிக்குமா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.