டிரம்ப்பை பேட்டி எடுத்த எலான் மஸ்க்.. நேரலையில் பார்த்த 1.2 பில்லியன் மக்கள்..!

By Bala Siva

Published:

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் அவர்களை எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்க் பேட்டி எடுத்த நிலையில் இந்த நேரடி ஒளிபரப்பை உலகம் முழுவதும் 1.4 பில்லியன் மக்கள் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர் என்பதும் தற்போதைய கருத்துக்கணிப்பின்படி இருவருக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பேட்டி எடுத்துள்ள நிலையில் அவர் இன்று அதிகாலை  இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்கு இந்த பேட்டி நேரலையில் ஒளிபரப்பானது. இந்த பேட்டியை சுமார் 1.4 மக்கள் உலகம் முழுவதும் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த பேட்டியில் டொனால்ட் டிரம்ப்,  கமலஹாரிஸ் அமெரிக்க அதிபர் ஆனால் நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு  சென்று விடும் என்றும், என்னுடன் விவாதத்தில் கலந்து கொண்ட ஜோ பைடனை தோற்கடித்ததால் தான் என்னை நோக்கி இன்னொரு தோட்டா வந்திருக்கிறது என்று தெரியும் என்றும் அவர் கூறினார்.

என்னை துப்பாக்கியால் கொலை செய்ய முயன்ற போதும் நான் உயிர் பிழைத்து இருக்கிறேன் என்றும் கடவுளை நம்பாதவர்கள் இனியாவது இது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க பொருளாதார மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நிறைய பணத்தை சேமித்தனர், ஆனால் இன்று பணத்தை சேமிக்க முடியாமல் கடன் வாங்கி செலவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள், என்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று விடும் என்றும் அவர் கூறினார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது ஈரான் உடைந்திருந்தது, அவர்களிடம் தீவிரவாதம் செய்வதற்கு பணம் இல்லை, இந்த நிலை தொடர்ந்து இருந்தால் இஸ்ரேல் ஒருபோதும் தாக்கப்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார். டொனால்ட் டிரம்பின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.