அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா போரை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஒரு ட்ரில்லியன் டாலர் வருமானம் ஈட்ட திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது திட்டங்கள் தோல்வியடைந்ததால், அதன் விளைவாக இந்தியா மீது வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது இந்த செயல்கள் அமெரிக்காவிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்ப்பின் திட்டமும் அதன் தோல்வியும்
உக்ரைன் போர் நிறுத்தப்பட்டால், ரஷ்யாவில் உள்ள உள்கட்டமைப்பு பணிகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் நிபந்தனை விதித்திருந்தார். அதேபோல், உக்ரைனில் உள்ள இயற்கை வளங்களை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் அவர் திட்டமிட்டார். இந்த இரண்டு திட்டங்களும் நிறைவேறினால் அமெரிக்காவிற்கு ஒரு ட்ரில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று அவர் கணக்கிட்டார்.
ஆனால், அவரது இந்த திட்டத்திற்கு ரஷ்யாவும் உக்ரைனும் ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டன. இந்த நிலையில், ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்த உதவும்படி இந்தியாவிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்தியாவின் வெளியுறவு கொள்கையின்படி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. ரஷ்யா மற்றும் உக்ரைனின் ஒத்துழைப்பின்மையும், இந்தியாவின் மறுப்பும் டிரம்ப்பின் ஒரு ட்ரில்லியன் டாலர் கனவை கலைத்துவிட்டன.
இந்தியா மீதான வரி விதிப்பு மற்றும் அதன் தாக்கம்
தனது திட்டம் தோல்வியடைந்த கோபத்தில், டிரம்ப் இந்தியா மீது அடுத்தடுத்து வரிகளை விதித்து வருகிறார். ஆனால், இந்த வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல், அமெரிக்காவையே கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்காவில் துணி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் டிரம்ப்பின் முடிவுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அமெரிக்க அரசியல் வட்டாரத்திலும் டிரம்ப்பின் இந்த கோமாளித்தனமான அணுகுமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜனநாயக கட்சியின் அரசியல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுடன் உறவை அமெரிக்கா கவனமாக மேம்படுத்தி வந்தது. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் நமக்கு இந்தியாவுடன் வலுவான உறவு இருந்தது. அதை ஒரே நாளில் டிரம்ப் கெடுத்துவிட்டார்” என்று குற்றம் சாட்டினார்.
சீனாவின் வளர்ச்சி மற்றும் இந்தியாவின் பங்கு
அமெரிக்க வெளியுறவுத்துறை கமிட்டியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. கிழக்கு ஆசியாவில் சீனாவின் வளர்ச்சியை தடுக்க இந்தியாவின் உதவி அவசியம் என்றும், அதனால்தான் இந்தியாவுடன் நட்பு நெருக்கமாக கொள்ளப்பட்டது என்றும் அந்த கமிட்டி தெரிவித்துள்ளது. டிரம்ப் தனது சுயநலத்திற்காக இந்தியா மீது வரி விதிப்பது அமெரிக்காவின் மதிப்பை குறைத்துவிடும். அதுமட்டுமின்றி, இந்தியா-சீனா போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்தால், அமெரிக்க பொருளாதாரமே பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்த உண்மைகளை அறியாத டிரம்ப், இந்தியா பொருளாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார். ஆனால், “அமெரிக்க வரலாற்றில் இது போன்ற ஒரு கோமாளித்தனமான அதிபரை நாங்கள் பார்த்ததே இல்லை. இவரது ஆட்சி எப்போது முடியும் என்று நாட்களை எண்ண தொடங்கிவிட்டோம்” என்று அமெரிக்க மக்களே வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
